டெங்கு விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொள்ளும் நடிகர் மயில்சாமி! மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினார்!

மக்கள் தங்களைத் தாங்களே காத்துக்கொள்ள வேண்டும். மக்களின் உயிரிழப்பு எனக்கு வருத்தத்தை ...
டெங்கு விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொள்ளும் நடிகர் மயில்சாமி! மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினார்!

மக்களிடம் டெங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் களமிறங்கியுள்ளார் நடிகர் மயில்சாமி. 

தமிழகம் முழுவதும் டெங்குக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அரசு மருத்துவமனைகளில் நாளுக்கு நாள் நோயாளிகள் கூட்டம் அதிகரித்து வருவதுடன், டெங்குவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட பலர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். தமிழகம் முழுவதும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஒரு நாளைக்கு சராசரியாக 700 பேர் சிகிச்சை பெறுகின்றனர். இதையடுத்து டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. டெங்கு தடுப்பு குறித்து விழிப்புணர்வுப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. டெங்கு காய்ச்சலைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், சென்னை மயிலாப்பூரில் வீதி வீதியாகத் தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து டெங்கு பாதிப்பு குறித்த விழிப்புணர்வை மேற்கொண்டுள்ளார் நடிகர் மயில்சாமி. அப்பகுதியில் உள்ள மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகம் செய்தார். சாலையில் நின்றுகொண்டு மைக் மூலமாக மக்களிடையே டெங்கு குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். இந்தச் செய்தியும் இதன் புகைப்படங்களும் சமூகவலைத்தளத்தில் பரவியது. இதனால் பலருடைய பாராட்டுகளைப் பெற்றுள்ளார் மயில்சாமி. 

விழிப்புணர்வுப் பிரசாரம் குறித்து மயில்சாமி பேட்டியளித்ததாவது: டெங்குக் காய்ச்சலால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாததே இந்நிலைக்குக் காரணம். மக்கள் தங்களைத் தாங்களே காத்துக்கொள்ள வேண்டும். மக்களின் உயிரிழப்பு எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. நாளுக்கு நாள் டெங்குவினால் உயிரிழப்புகள் அதிகமாகி வருகின்றன. மக்களும் மற்றவர்களுக்கு நிலவேம்பு கொடுத்து டெங்குவைத் தடுக்க முயற்சி செய்யவேண்டும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com