சிபிஎஸ்இ பள்ளிகளில் ஜெர்மனி, பிரெஞ்சு பாடங்கள் நீக்கம்: வைகோ கண்டனம்

மத்திய அரசுப் பள்ளிகளில் ஜெர்மனி, பிரெஞ்சு ஆகிய அயல் மொழிகளை மூன்றாவது மொழியாக அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட்டிருப்பதற்கு மதிமுக பொதுச் செயலாளர்
சிபிஎஸ்இ பள்ளிகளில் ஜெர்மனி, பிரெஞ்சு பாடங்கள் நீக்கம்: வைகோ கண்டனம்

மத்திய அரசுப் பள்ளிகளில் ஜெர்மனி, பிரெஞ்சு ஆகிய அயல் மொழிகளை மூன்றாவது மொழியாக அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட்டிருப்பதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: அடுத்த கல்வி ஆண்டிலிருந்து சிபிஎஸ்இ பள்ளிகளில் ஜெர்மனி, பிரெஞ்சு போன்ற அயல் மொழிகளை மூன்றாவது மொழியாக அனுமதிக்கக் கூடாது என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் திட்டவட்டமாக அறிவுறுத்தி இருக்கிறது. 
மாணவர்கள் விரும்பினால் அயல் மொழிகளை நான்காவது, ஐந்தாவது மொழியாகக் கற்றுக்கொள்ளட்டும். புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி, சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழி பாடத் திட்டம் நடைமுறைப் படுத்தப்படும்போது, ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் எட்டாவது அட்டவணையில் உள்ள இன்னொரு மொழியைத்தான் தேர்வு செய்ய வேண்டும். அந்நிய மொழிகளுக்கு இடம் இல்லை என்றும், இது அரசின் கொள்கை முடிவு என்றும் சிபிஎஸ்இ சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அயல் மொழிக்கு இடம் அளிக்கக்கூடாது என்ற பெயரில் சம்ஸ்கிருதத்தை வலிந்து திணிப்பதற்கான நடவடிக்கை இது என்பது அப்பட்டமாகத் தெளிவாகிறது. 
ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு, ஒரே நாடு என்று இந்துத்துவாக் கோட்பாட்டை நடைமுறைப்படுத்த தேவையான அனைத்து முயற்சிகளிலும் பாஜக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருவது கடும் கண்டனத்துக்குரியதாகும்.
இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சீர்குலைக்கும் வகையில், சம்ஸ்கிருதத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாடும் போக்கை மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். மத்திய அரசுப் பள்ளிகளில் சம்ஸ்கிருதத்தைக் கட்டாயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com