டாஸ்மாக்கில் மதுபானங்களின் விலை உயருகிறது: தமிழக அமைச்சரவை முடிவு! 

டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களின் விலையை உயர்த்துவது என தமிழக அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
டாஸ்மாக்கில் மதுபானங்களின் விலை உயருகிறது: தமிழக அமைச்சரவை முடிவு! 

சென்னை: டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களின் விலையை உயர்த்துவது என தமிழக அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களின் விலையை உயர்த்துவது என தமிழக அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

அதன்படி டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் பீர் வகை மதுபானங்களின் விலை பாட்டிலுக்கு ரூ.5 உயர்த்தப்படுகிறது.அதே போல 180 மி.லி அளவுள்ள குவார்ட்டர் வகை மதுபானங்களின் விலை பாட்டிலுக்கு ரூ.12 உயர்த்தப்படுகிறது.

அத்துடன் டாஸ்மாக்கில் மது விற்பனைக்கு என ரூ. 5,212 கோடியை இலக்காக நிர்ணயம் செய்வது என்றும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com