தமிழக அரசு ஊழியர்களுக்கு 30% ஊதிய உயர்வு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

தமிழக அரசு ஊழியர்களுக்கு 30% ஊதிய உயர்வு வழங்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துளார்.    
தமிழக அரசு ஊழியர்களுக்கு 30% ஊதிய உயர்வு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு 30% ஊதிய உயர்வு வழங்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.    

தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல் செய்வது மற்றும் தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் தற்பொழுது முதல்வர் பழனிசாமி இது தொடர்பாக தற்பொழுது அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழக அரசு ஊழியர்களுக்கு 30% ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. இவ்வாறு ஊதியம் உயர்த்தப்பட்ட பிறகு குறைந்த பட்ச ஊதியமாக ரூ.15,700 மற்றும் அதிக பட்ச ஊதியமாக ரூ.2,25,000 இருக்கும். இந்த ஊதிய உயர்வு 01.01.2016 முதல் முன்தேதியிட்டு வழங்கபடும்.

அதேபோல் மற்ற தமிழக அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை முழுமையாக அமல் செய்வது குறித்து அரசாணைகளை வெளியிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒட்டுமொத்தமாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அதிக ஊதியம் அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வுகள் 01.10.2017 முதல் பணப்பலன்களாக அளிக்குமாறு ஆணையிடப்பட்டுள்ளது.

அதுபோலவே குடும்ப ஓய்வூதிய பெறுவோருக்கு குறைந்தபட்சமாக ரூ.7,850 மற்றும் அதிகபட்சமாக ரூ.1,12,500 வழங்கப்பட உள்ளது.

பணியில் இருந்து ஓய்வு பெறும் பொழுது வழங்கப்படும் பணிக்கொடைக்கான உச்ச வரம்பானது தற்பொழுது நடைமுறையில் உள்ள ரூ. 10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட உள்ளது.

இதன் மூலம் 8 லட்சம் அரசு ஊழியர்கள் பயன் பெறுவார்கள். இதனால் உண்டாகும் நிதிச்சுமையை தமிழக அரசு முழுமையாக ஏற்றுக்கொள்ளும்

இவ்வாறு முதல்வரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com