அக்.14-இல் ராமதாஸ் நூல் வெளியீட்டு விழா

பாமக நிறுவனர் ராமதாஸ் எழுதிய பாட்டாளி சொந்தங்களே என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் சனிக்கிழமை (அக்.14) நடைபெற உள்ளது.

பாமக நிறுவனர் ராமதாஸ் எழுதிய பாட்டாளி சொந்தங்களே என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் சனிக்கிழமை (அக்.14) நடைபெற உள்ளது.
கல்கி வார இதழில் 'பாட்டாளி சொந்தங்களே!' என்ற தலைப்பில் ராமதாஸ் தன் வரலாற்றுத் தொடர் எழுதி வந்தார். அது நூலாகத் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட உள்ளது.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள திருவாவடுதுறை ராஜரத்தினம் அரங்கில் காலை 10.30 மணிக்கு நடைபெறும் விழாவுக்கு பாமக தலைவர் ஜி.கே. மணி தலைமை வகிக்கிறார். 
திண்டுக்கல் காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழக பேராசிரியர் க.பழனித்துரை நூலை வெளியிட, பத்திரிகையாளர் மாலன் பெற்றுக் கொள்கிறார். பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். விழாவை கவிஞர் ஜெயபாஸ்கரன் தொகுத்து வழங்குகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com