மஞ்சளாறு, சோத்துப்பாறையில் இருந்து நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு

மஞ்சளாறு, சோத்துப்பாறை நீர்த்தேக்கங்களில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்

மஞ்சளாறு, சோத்துப்பாறை நீர்த்தேக்கங்களில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தேனி மாவட்டம் மஞ்சளாறு நீர்த்தேக்கத்தில் இருந்து பழைய ஆயக்கட்டு, புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு முதல் போக சாகுபடிக்காக வரும் 15-ஆம் முதல் தண்ணீர் திறந்து விடப்படும். இதனால் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 5 ஆயிரத்து 259 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
தேனி மாவட்டம் சோத்துப்பாறை நீர்த்தேக்கத்தில் இருந்து பழைய நன்செய், புதிய புன்செய் நிலங்களுக்கு வரும் 15- ஆம் தேதி நீர் திறக்கப்படும். இதனால், தேனி மாவட்டத்தில் உள்ள 2,865 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com