5 நாள்கள் பரோல் முடிந்தது: சிறைக்குத் திரும்பினார் சசிகலா

5 நாள்கள் பரோல் முடிந்ததால், அதிமுக (அம்மா அணி) பொதுச் செயலாளர் சசிகலா வியாழக்கிழமை (அக்.12) பெங்களூரில் உள்ள மத்திய சிறைக்குத் திரும்பினார்.
5 நாள்கள் பரோல் முடிவடைந்த நிலையில், வியாழக்கிழமை  பெங்களூரு மத்திய சிறைக்கு  காரில் வந்த சசிகலா.

வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்துகள் குவித்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று கடந்த பிப்.15 ஆம் தேதி முதல் அதிமுக (அம்மா அணி) பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் உள்ளனர்.
இதனிடையே, சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தனது கணவர் நடராஜனைச் சந்திப்பதற்காக 233 நாள்கள் சிறைவாசத்துக்குப் பிறகு, கடந்த அக்.6-ஆம் தேதி பரோலில் வந்தார் சசிகலா.
சிறையிலிருந்து கார் மூலம் சென்னைக்குச் செல்லவும், மீண்டும்பெங்களூருக்குத் திரும்பவும் தலா ஒரு நாள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதால், அக்.7-ஆம் தேதி முதல் ஐந்து நாள்கள் பரோல் காலம் கணக்கிடப்பட்டது. அதன்படி, அக்.11-ஆம் தேதி புதன்கிழமை பரோல் காலம் நிறைவு பெற்றது. 
இதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை சென்னையில் இருந்து கார் மூலம் புறப்பட்ட சசிகலா, மாலை 4.30 மணி அளவில் பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறைக்கு வந்தார். அவருடன், அதிமுக (அம்மா அணி) துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், விவேக் உள்ளிட்டோர் வந்திருந்தனர். சசிகலாவை வரவேற்க மத்திய சிறைக்கு முன்பாக அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் குவிந்திருந்தனர்.
5 நாள்கள் பரோல் முடிவடைந்த நிலையில், வியாழக்கிழமை  பெங்களூரு மத்திய சிறைக்கு காரில் வந்த சசிகலா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com