சிங்கக் குட்டிக்குப் பெயர் சூட்டினார் முதல்வர்

சென்னையை அடுத்த வண்டலூரில் சிங்கக் குட்டிக்கு "விஷ்ணு' என்று பெயர் சூட்டினார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஆண் சிங்கத்துக்கு (இடது) விஷ்ணு என்று பெயர் சூட்டிய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. உடன் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் தென் சென்னை மக்கள

இதுகுறித்து, தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:
வண்டலூர் உயிரியல் பூங்காவில், தமிழ்நாடு உயிரியல் பூங்கா ஆணையத்தின் 19-வது ஆட்சி மன்றக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடந்தது. வண்டலூர், கிண்டி, சேலம் குரும்பபட்டி பூங்காக்களை மேம்படுத்த ரூ.9.12 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மேலும், பார்வையாளர் வசதிக்காக வண்டலூர் பூங்காவில் 40 பேர் இருக்கைகள் கொண்ட 4 சிறிய தொடர் வண்டி வாங்க ஒப்புதல் கொடுக்கப்பட்டது. வண்டலூர் பூங்காவில் பிறந்த ஆண் சிங்கக் குட்டிக்கு "விஷ்ணு' என முதல்வர் பெயர் சூட்டியதுடன், பூங்காவின் தெற்குப் பகுதியில் கட்டப்பட்டுள்ள உயர்நிலை வன உயிரினப் பாதுகாப்பு நிறுவனத்தையும் திறந்து வைத்தார்.
அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், டி.ஜெயக்குமார், பா.பென்ஜமின் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com