விரைவு ரயில்களில் பொதுப்பெட்டிகள் குறைப்பு: நீதிமன்றம் தலையிட முடியாது

வைகை, பல்லவன் அதிவிரைவு ரயில்களில் பொதுப்பெட்டிகள் குறைக்கப்பட்ட விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைகை, பல்லவன் அதிவிரைவு ரயில்களில் பொதுப்பெட்டிகள் குறைக்கப்பட்ட விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைகை மற்றும் பல்லவன் அதிவிரைவு ரயில்களில் இருந்து நீக்கப்பட்ட பொதுப்பெட்டிகளை மீண்டும் இணைக்க தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று மதுரை ஆண்டாள்புரத்தைச் சேர்ந்த பி.கார்த்தி தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது தெற்கு ரயில்வே பொதுமேலாளர், தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட மேலாளர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 
இந்நிலையில் இம்மனு நீதிபதிகள் எம்.வேணுகோபால், ஜெ.அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. 
அப்போது ரயில்வே நிர்வாகம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில்,வைகை , பல்லவன் அதிவிரைவு ரயில்களில் 5 முன்பதிவில்லா ரயில் பெட்டிகள் இருந்தன. அவற்றில் ஒன்றுதான் நிர்வாக வசதிக்காக குறைக்கப்பட்டுள்ளது. 
மேலும் முன்பதிவில்லா ரயில் பெட்டிக்கும், முன்பதிவுப் பெட்டிக்கும் கட்டண வித்தியாசம் ரூ.15 மட்டும்தான். மேலும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, ரயில்வே நிர்வாக முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது.
அப்போது மனுதாரர் தரப்பு வழக்குரைஞர், உச்ச நீதிமன்ற உத்தரவு, ரயில்களில் புதிதாக பெட்டிகளை சேர்ப்பது உள்ளிட்டவைகளுக்கே பொருந்தும். தற்போதைய கோரிக்கைக்கு பொருந்தாது என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com