டெங்கு காய்ச்சலை வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம்: விஜயகாந்த் வேண்டுகோள்! 

டெங்கு காய்ச்சலை வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெங்கு காய்ச்சலை வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம்: விஜயகாந்த் வேண்டுகோள்! 

சென்னை; டெங்கு காய்ச்சலை வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சமீப காலமாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்து வருகிறார். முன்னதாக திருவள்ளூர் அரசு மருத்துவமனை, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளில் டெங்குவால் பாதிக்கபட்டவர்களை தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேரில் பார்த்து நலம் விசாரித்தார்.

அந்த வரிசையில் இன்று சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது அவர் மருத்துவமனையில் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறதா என கேட்டறிந்தார். பின்னர் அவர்கள் அனைவருக்கும்  ரொட்டி, பழம் உள்ளிட்டவற்றை அவர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த் கூறியதாவது:

கடமையாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசின் செயல்பாடு மிகவும் மோசமாக உள்ளது. டெங்குவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும். இவற்றை விட்டு விட்டு ஆட்சியை காப்பாற்றுவதிலேயே அதிமுகவினர் கவனமாக இருக்கிறார்கள்,

டெங்கு காய்ச்சல் பற்றி தமிழகத்தில் மத்தியக்குழு தாமதமாக ஆய்வு செய்துள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் செயல்பாட்டில் இல்லாததே டெங்குவை கட்டுப்படுத்தாதற்கு ஒரு காரணமாகும், டெங்கு காய்ச்சலை வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம்.

இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com