"இரவு 10 முதல் காலை 6 வரை பட்டாசுகள் வெடிக்கக் கூடாது': மாவட்ட ஆட்சியர்

இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பட்டாசுகள் வெடிக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை அறிவித்துள்ளார்.
"இரவு 10 முதல் காலை 6 வரை பட்டாசுகள் வெடிக்கக் கூடாது': மாவட்ட ஆட்சியர்

இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பட்டாசுகள் வெடிக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது: உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி இரவு 10 மணிமுதல் காலை 6 மணிவரை ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகள் வெடிப்பது தடை செய்யப்பட்டுள்ள்து. அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் தயாரிப்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆண்டுதோறும் பொதுமக்கள் விபத்தில்லா தீபாவளியைக் கொண்டாடுவது குறித்தும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. பட்டாசு வெடிக்கும்போது ஏற்படும் ஒலி அளவானது நான்கு மீட்டர் தூரத்தில் 125 டெசிபல் (ஏ1 அளவீடு) அல்லது 145 டெசிபலுக்கு (சி அளவீடு) அதிகமாக ஒலி ஏற்படுத்தும் பட்டாசுகளை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது.

பொதுமக்கள் இரவு 10 மணிமுதல் காலை 6 மணிவரை ஒலி எழுப்பக் கூடிய பட்டாசுகளைக் கண்டிப்பாக வெடிக்கக் கூடாது.  மேலும் 125 டெசிபல் அளவுக்கு கீழ் ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை மட்டுமே வாங்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com