நடிகர் விஜய் திரைப்படத்துக்கு சிக்கல் தீர்ந்தது

விலங்குகள் நல வாரியம் தடையில்லாச் சான்று வழங்கியுள்ளதால் தீபாவளிக்கு திட்டமிட்டபடி நடிகர் விஜய் நடித்துள்ள மெர்சல் திரைப்படம் வெளியாகவுள்ளது.

விலங்குகள் நல வாரியம் தடையில்லாச் சான்று வழங்கியுள்ளதால் தீபாவளிக்கு திட்டமிட்டபடி நடிகர் விஜய் நடித்துள்ள மெர்சல் திரைப்படம் வெளியாகவுள்ளது.
அட்லி இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன், வடிவேலு உள்ளிட்டோர் நடித்துள்ள படம் மெர்சல். இப்படத்தில் புறா, நாகப்பாம்பு, காளை மாடு உள்ளிட்ட உயிரினங்களை நிஜமாகப் பயன்படுத்தியிருப்பதால், தணிக்கை குழுவினருக்கு விலங்குகள் நல வாரியம் கடிதம் எழுதியது. இதைத் தொடர்ந்து சர்ச்சை எழுந்தது. நிஜ உயிரினங்களைப் பயன்படுத்தியதற்கு விலங்குகள் நல வாரியம் எதிர்ப்பு தெரிவித்ததால், மெர்சல் படத்தின் வெளியீட்டில் சிக்கல் எழுந்தது. 
இதனால், தீபாவளியன்று திட்டமிட்டபடி படம் வெளிவருமா என்று சந்தேகம் எழுந்தது. திரையரங்குகளில் படத்துக்கான டிக்கெட்டை முன் பதிவு செய்வதிலும் ரசிகர்களுக்கு குழப்பம் இருந்து வந்தது. 
படம் பார்த்த நல வாரியம்: இந்த நிலையில் மெர்சல் திரைப்படம், விலங்குகள் நல வாரிய உறுப்பினர்களுக்கு சென்னையில் திங்கள்கிழமை (அக்.16) திரையிட்டு காண்பிக்கப்பட்டது. அப்போது விலங்குகள் நல வாரியம் எழுப்பிய சந்தேக கேள்விகள் அனைத்துக்கும் படக்குழுவினர் பதிலளித்தனர். 
தடை அகன்றது: இதையடுத்து மெர்சல் படத்துக்கு எவ்விதத் தடையுமில்லை என்று விலங்குகள் நல வாரியம் அறிவித்தது. இதற்கான முறையாக அறிவிப்பை விலங்குகள் நல வாரியம் தனது இணைய தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதையடுத்து மெர்சல் திரைப்படம் தீபாவளிக்கு திட்டமிட்டபடி திரைக்கு வருவது உறுதியாகியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com