பாம்பன் கடலில் தொங்கு பாலம் அமைக்க ரூ.954 கோடி ஒதுக்கீடு

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் நடை பாதையுடன் கூடிய தொங்கு பாலம் அமைக்க மத்திய அரசு ரூ.954 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக மக்களவை உறுப்பினர் அ.அன்வர்ராஜா தெரிவித்தார்.
பாம்பன் கடலில் தொங்கு பாலம் அமைக்க ரூ.954 கோடி ஒதுக்கீடு

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் நடை பாதையுடன் கூடிய தொங்கு பாலம் அமைக்க மத்திய அரசு ரூ.954 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக மக்களவை உறுப்பினர் அ.அன்வர்ராஜா தெரிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை அவர் கூறியது: 
மதுரையிலிருந்து ராமநாதபுரம் வரை 115 கி.மீ.தூரத்துக்கு ரூ.967 கோடி மதிப்பில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இதனையடுத்து பரமக்குடியிலிருந்து ராமநாதபுரம் வரை 60 கி.மீ. தூரத்துக்கு ரூ.200 கோடி மதிப்பிலும் ராமநாதபுரத்திலிருந்து ராமேசுவரம் வரை 60 கி.மீ. தூரத்துக்கு ரூ.ஆயிரம் கோடி மதிப்பிலும் 4 வழிச் சாலைகள் அமையவுள்ளன. பாம்பன் கடல் பகுதியில் வாகனங்கள் செல்லவும், திரும்பி வரவும் வசதியாக, நடைபாதையோடு கூடிய தொங்கு பாலம் அமைக்க மத்திய அரசு ரூ.954 கோடி ஒதுக்கியிருக்கிறது. ஜெர்மனி நாட்டில் உள்ள கடல் பாலத்தைப் போன்று இந்தப் பாலம் அமைக்க உலக அளவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்படவுள்ளது. 
காரைக்குடியிலிருந்து தொண்டி, சாயல்குடி,கீழக்கரை வழியாக புதிய ரயில் பாதை அமைக்க கடந்த 2010 ஆம் ஆண்டு ஆய்வு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரிலும், கடலாடியிலும் அனல் மின் நிலையங்கள் அமைக்க இருப்பதால் நிலக்கரி எடுத்துச் செல்ல வசதியாக புதிய ரயில் பாதை அமையவுள்ளது. 
காரைக்குடியிலிருந்து தூத்துக்குடி வழியாக அமையவுள்ள புதிய ரயில் பாதைக்காக ராமநாதபுரம் ரயில் நிலையத்தை சந்திப்பு ரயில் நிலையமாக மாற்றவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு சந்திப்பு ரயில் நிலையமாக மாற்றினால் ராமநாதபுரம் ரயில் நிலையம் கூரியூர் வரை விரிவாக்கம் செய்யப்படும். ரயில்கள் அதிகமாக வந்து செல்லவும் வாய்ப்பு ஏற்படும். ராமேசுவரத்திலிருந்து சென்னைக்கு பகல் நேர விரைவு ரயில் இயக்கவும் வலியுறுத்தி வருகிறோம்.
குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் நினைவிடத்திற்கு வெளி மாநில,மாவட்ட பயணிகள் வந்து செல்ல வசதியாகவும், தங்கச்சி மடம் பகுதி மக்களின் கோரிக்கைகளை ஏற்றும் அங்கு புதிய ரயில் நிலையம் அமைக்கப்பட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. கோவா, மும்பை, பாலக்காடு செல்லும் பயணிகள் வசதிக்காக ராமேசுவரத்திலிருந்து மங்களுரூக்கும் பகல் நேர விரைவு ரயில் இயக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com