பிலிப்பின்ஸ் அருகே மூழ்கும் கப்பலில் தவிக்கும் தூத்துக்குடி மாலுமியை மீட்க கோரிக்கை

பிலிப்பின்ஸ் நாட்டின் கடல் பகுதியில் மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலில்  தவிக்கும் தூத்துக்குடியைச் சேர்ந்த மாலுமியை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என
பிலிப்பின்ஸ் அருகே மூழ்கும் கப்பலில் தவிக்கும் தூத்துக்குடி மாலுமியை மீட்க கோரிக்கை

பிலிப்பின்ஸ் நாட்டின் கடல் பகுதியில் மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலில்  தவிக்கும் தூத்துக்குடியைச் சேர்ந்த மாலுமியை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் பகுதியைச் சேர்ந்த பெவின் மகன் பி. தோமஸ். இவர், கப்பலில் மாலுமியாக வேலைபார்த்து வருகிறார். துபை நாட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஸ்டெல்லர் ஓஷன் என்ற நிறுவனத்துக்குச் சொந்தமான எமரால்ட் ஸ்டார் என்ற கப்பலில் கடந்த 13 ஆம் தேதி தோமஸ் பணியில் இருந்தாராம். அவருடன் இந்திய மாலுமிகள் 25 பேரும் பணியில் இருந்தனாரம்.

இந்நிலையில், பிலிப்பின்ஸ் நாட்டு கடல் பகுதியில் சென்றபோது திடீரென ஏற்பட்ட பழுது காரணமாக கப்பல் கடலில் மூழ்கத் தொடங்கியது. இதையடுத்து, மீட்பு கப்பல்கள் மூலம் மேற்கொண்ட நடவடிக்கையில் டென்ஸா கோப்ரா என்ற கப்பல் மூலம் 10 பேரும், சமிநிந்தா கப்பல் மூலம் 5 பேரும் உயிருடன் மீட்கப்பட்டனர். மேலும், கப்பலுக்குள் தோமஸுடன் சேர்த்து 11 பேர் உள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, மாலுமி தோமஸின் பெற்றோர் மற்றும் புன்னக்காயல் மாலுமிகள் நலச் சங்கத்தினர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷை திங்கள்கிழமை இரவு சந்தித்து மத்திய, மாநில அரசுகள் தலையிட வலியுறுத்தி மனு அளித்தனர்.

இதுதொடர்பாக மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், மாலுமி தோமஸை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் தங்களிடம் உறுதியளித்தாக தோமஸின் தந்தை பெவின் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com