வரத்துக் குறைவால் மல்லிகைக்கு மவுசு: கிலோ ரூ.1300-க்கு விற்பனை

தீபாவளி பண்டிகையையொட்டி திண்டுக்கல் மற்றும் நிலக்கோட்டை பூச் சந்தைகளில் மல்லிகைப் பூ வரத்து குறைவால் கிலோ ரூ.1300 வரை விற்பனை செய்யப்பட்டது.
வரத்துக் குறைவால் மல்லிகைக்கு மவுசு: கிலோ ரூ.1300-க்கு விற்பனை

தீபாவளி பண்டிகையையொட்டி திண்டுக்கல் மற்றும் நிலக்கோட்டை பூச் சந்தைகளில் மல்லிகைப் பூ வரத்து குறைவால் கிலோ ரூ.1300 வரை விற்பனை செய்யப்பட்டது.
நிலக்கோட்டை சந்தையில் விற்பனையான பூக்களின் விலை விவரம் (கிலோவுக்கு): மல்லிகை- ரூ.1200 முதல் ரூ.1500, ஜாதி மல்லி- ரூ.300, முல்லை- ரூ.600, ரோஜா- ரூ.100 வீதம் விற்பனை செய்யப்பட்டது.
அதேபோல், திண்டுக்கல் சந்தையில் திங்கள்கிழமை பூக்களின் விலை விவரம் (கிலோவுக்கு): மல்லிகை- ரூ.1300, கனகாம்பரம்- ரூ.1000, முல்லை- ரூ.600, சம்மங்கி- ரூ.400, ஜாதி மல்லி- ரூ.500, ரோஜா- ரூ.250 வீதம் விற்பனை செய்யப்பட்டது.
இதுகுறித்து எத்திலோடு பகுதியைச் சேர்ந்த விவசாயி சந்திரசேகர் கூறுகையில், நிலக்கோட்டை பகுதியில் மல்லிகை பூக்கள் சீசன் முடியும் தருவாயில் உள்ளது. மேலும் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருவதால், செடியில் பூச்சி தாக்குதல் அதிகமாக உள்ளதால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. வரத்து குறைந்த நிலையில், தீபாவளி என்பதால் மல்லிகைக்கு மவுசு அதிகரித்துள்ளது. கிலோ ரூ.1300 வரை விற்பனை செய்யப்படுவது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரும் ஐப்பசி மாத முகூர்த்த நாள்களில் மல்லிகை விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com