டிஜிட்டல் வர்த்தக முன்னேற்றம் குறித்த கருத்தரங்கு

வண்டலூர் பிஎஸ்.அப்துர் ரகுமான் பல்கலைக்கழகத்தின் கிரசென்ட் வணிக மேலாண் கல்லூரியில் டிஜிட்டல் வர்த்தகத் துறையில் நிகழ்ந்து வரும் வியக்கத்தக முன்னேற்றம் குறித்த செய்முறை கருத்தரங்கு அண்மையி

வண்டலூர் பிஎஸ்.அப்துர் ரகுமான் பல்கலைக்கழகத்தின் கிரசென்ட் வணிக மேலாண் கல்லூரியில் டிஜிட்டல் வர்த்தகத் துறையில் நிகழ்ந்து வரும் வியக்கத்தக முன்னேற்றம் குறித்த செய்முறை கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.
ஹைதராபாத் வணிகக் கல்லூரி இயக்குநர் தீபா கபூர் வரவேற்றார். டீன் பிரமத்ராஜ் சின்கா கருத்தரங்கைத் தொடங்கி வைத்தார். லயோலா வணிக மேலாண் கல்லூரி லிபா நிறுவன இயக்குநர் கஸ்மீர் ராஜ், இந்தக் கருத்தரங்கின் அவசியம் குறித்து விவரித்தார்.
டிவிஎஸ் லூகாஸ் நிறுவன முன்னாள் துணைத் தலைவர் எஸ்.கிருஷ்ணகுமார் பேசும்போது, 'தானியங்கி அறிவாற்றல் தொழில்நுட்பம் அனைத்துத் துறைகளையும் ஆக்கிரமிக்கத் தொடங்கி விட்டது. பொருட்களை குறைந்த செலவில் தேவைக்கேற்ப உற்பத்தி செய்து, குறித்த நேரத்தில் விநியோகம் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் தானியங்கி தொழில்நுட்ப வளர்ச்சி, வேலையில்லாத் திண்டாட்டத்தை உருவாக்கினாலும் ,தவிர்க்க முடியாதது' என்றார்.
எக்ஸ்.எல்.ஆர்.ஐ.நிறுவன இயக்குநர் அஜித் மத்தாய் சுகாதாரத் துறையில் நிகழ்ந்து வரும் அறிவார்ந்த தானியங்கி தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து விளக்கினார்.
இன்போசிஸ் நிறுவன இயக்குநர் பாண்டியராஜன் விநியோக முறையில் நிகழ்ந்து வரும் தானியங்கி தொழில்நுட்ப வளர்ச்சி பற்றி விவரித்தார். கருத்தரங்கில் பல்வேறு வணிக மேலாண் கல்லூரிகளின் மாணவர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com