தீபாவளி நாளில் பணி: வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு கண்டனம்

தீபாவளி பண்டிகை நாளில் (அக்.18) காசோலை ஒப்புதல் மற்றும் செயல்முறைப்படுத்தல் மையம் ( சிசிபிசி) இயங்கும் என்ற இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு கடும்

தீபாவளி பண்டிகை நாளில் (அக்.18) காசோலை ஒப்புதல் மற்றும் செயல்முறைப்படுத்தல் மையம் ( சிசிபிசி) இயங்கும் என்ற இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, இந்தக் கூட்டமைப்பின் தமிழகப் பிரிவு செயலாளர் ஆர்.சேகரன் வெளியிட்ட அறிக்கை: முக்கிய தேசிய பண்டிகை நாளான தீபாவளியன்று காசோலை ஒப்புதல், செயல்முறைப்படுத்தல் மையத்தின் ( சென்ட்ரலைஸ் கிளியரிங் ப்ராசஸ் சென்டர்) ஊழியர்களுக்கு விடுமுறை கொடுக்க இந்திய ரிசர்வ் வங்கி மறுக்கிறது. காசோலை செயல்முறை, நேஷனல் பேமன்ட்ஸ் எனும் தனியார் நிறுவனத்தின்கீழ் வருகிறது. இது இந்திய ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த நிறுவனத்துக்குப் பணியை ஒத்திவைத்து, காசோலையை செயல்படுத்தும் மையத்துக்கு விடுமுறை கொடுக்கலாம். ஆனால், அதை இந்திய ரிசர்வ் வங்கி செய்யவில்லை.
மாறாக, தீபாவளி பண்டிகை நாளில் பணி என்ற இந்திய ரிசர்வ் வங்கியின் நிர்பந்தக் கொள்கை, ஊழியர்களின் குடும்பத்தில் அதிருப்தியை ஏற்படுத்தும். தீபாவளி தினத்தில் வங்கி ஊழியர்களுக்கு விடுமுறை மறுக்கப்படுவது கடும் கண்டனத்துக்குரியது என்று அந்த அறிக்கையில் தெவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com