சென்னையில் காற்று மாசினை ஆறு மடங்கு அதிகமாக்கி கடந்து சென்ற தீபாவளி! 

இவ்வாண்டு தீபாவளியின் பொழுது சென்னையில் வழக்கத்தை விட காற்று மாசு கடுமையாக அதிகரித்துள்ளதாக தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
சென்னையில் காற்று மாசினை ஆறு மடங்கு அதிகமாக்கி கடந்து சென்ற தீபாவளி! 

சென்னை இவ்வாண்டு தீபாவளியின் பொழுது சென்னையில் வழக்கத்தை விட காற்று மாசு கடுமையாக அதிகரித்துள்ளதாக தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை, நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வழக்கம் போல அனைத்து ஊர்களிலும் மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். சென்னையிலும் பட்டாசுகளின் அட்டகாசத்திற்கு குறைவில்லை.

இதனையொட்டி தொடர்ச்சியாக பட்டாசுகள் வெடித்ததால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் புகை மூட்டம் ஏற்பட்டது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் நோய் வாய்ப்பட்டுள்ள முதியவர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். புகை கண்ணை மறைத்தால் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் சரிவர தெரியாத காரணத்தால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இந்நிலையில் நேற்றைய தீபாவளி கொண்டாட்டத்திற்காக சென்னையில் ஏற்பட்ட ஒலி மாசு குறித்த முழுமையான அறிக்கையினை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இன்று மாலை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னையில் இம்முறை வழக்கத்தை விட தீபாவளியின் போது காற்று மாசு அதிக அளவில் அதிகரித்துள்ளளது. சென்னையின் முக்கிய 5 இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், காற்றில் அதிகபட்சமாக 100 மைக்ரோ கிராம் இருக்க வேண்டிய நுண்துகள் அளவு,  சவுகார்பேட்டையில் தான் அதிகபட்சமாக 777 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திருவல்லிக்கேணி - 597, நுங்கம்பாக்கம் - 541 மற்றும் தி.நகரில் 529 மைக்ரோ கிராம் நுண்துகள்கள் காற்றில் இருந்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com