அக்.25 முதல் இந்திய முறை படிப்புகளுக்கு 2-ஆம் கட்டக் கலந்தாய்வு

இந்திய முறைப் படிப்புகளுக்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வு சென்னையில் அக். 25-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.

இந்திய முறைப் படிப்புகளுக்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வு சென்னையில் அக். 25-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஹோமியோபதி ஆகிய இந்தியமுறைப் படிப்புகளுக்கான முதல் கட்டக் கலந்தாய்வு அக். 11-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை நடைபெற்றது.
கலந்தாய்வின் முடிவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 390 இடங்களும் காலியாகின. தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 295 மட்டும் காலியாக உள்ளன.
இந்த இடங்கள் மற்றும் முதல் கட்ட கலந்தாய்வில் பங்கேற்று இடங்களைப் பெற்று கல்லூரிகளில் சேராமல் விட்ட இடங்கள், இடமாறுதல் ஆகியவற்றுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு அக். 25-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 
சென்னை அரும்பாக்கம் இந்திய முறை மருத்துவமனை வளாகத்தில் கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வுக்கான அட்டவணையை சுகாதாரத் துறையின் www.tnhealth.org என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மூன்று தினங்களும் காலை 8 மணிக்கு கலந்தாய்வு தொடங்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com