ஒடிசா கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மையம் உருவாகியுள்ளதால், பாம்பன் துறைமுகத்தில் ஏற்றப்பட்டுள்ள 1-ஆம் எண் புயல் கூண்டு.
ஒடிசா கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மையம் உருவாகியுள்ளதால், பாம்பன் துறைமுகத்தில் ஏற்றப்பட்டுள்ள 1-ஆம் எண் புயல் கூண்டு.

பாம்பன், தூத்துக்குடி, புதுவை துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்

ராமேசுவரம் பாம்பன் துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

ராமேசுவரம் பாம்பன் துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 
ஒடிசாவின் தெற்கு கடல் பகுதியில் 440 கிலோ மீட்டர் தொலைவில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மையம் உருவாகி உள்ளது. இதனால், பாம்பன், ராமேசுவரம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாகவும், பாதுகாப்புடன் மீன்பிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தும் வகையில், பாம்பன் தெற்குவாடி பகுதியில் உள்ள துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும், ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் எனவும் மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தூத்துக்குடி கடலோரப் பகுதியில் அதிக வேகத்தில் காற்று வீசலாம் என்ற நோக்கில், தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் வியாழக்கிழமை 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
புயல் சின்னம் காரணமாக தூத்துக்குடி கடலோரப் பகுதியில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது. இதனால், மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் வியாழக்கிழமை மாலை ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இருப்பினும், தற்போது மீனவர்கள் கடலுக்குச் செல்ல எந்தவித தடையும் இதுவரை விதிக்கப்படவில்லை என மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதுவை: புதுச்சேரி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 
ஒடிஸா புயல் கரையைக் கடப்பதை எச்சரிக்கும் வகையில், புதுச்சேரியில் உள்ள துறைமுகத்தில், ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு வியாழக்கிழமை ஏற்றப்பட்டது. இதனால், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும், பொது மக்களுக்கும் புயல் தாக்கம் தொடர்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com