மாசடைந்து வரும் மலைப்பட்டு பிள்ளையார் கோயில் குளம்

மலைப்பட்டு கிராமத்தின் குடிநீர் ஆதாரமாக விளங்கிய பிள்ளையார் கோயில் குளம் தற்போது மாசடைந்துள்ளது. இதனை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மலைப்பட்டு கிராமத்தில் கழிவுநீர் கலந்ததால் மாசடைந்துள்ள பிள்ளையார் கோயில் குளம்.
மலைப்பட்டு கிராமத்தில் கழிவுநீர் கலந்ததால் மாசடைந்துள்ள பிள்ளையார் கோயில் குளம்.

மலைப்பட்டு கிராமத்தின் குடிநீர் ஆதாரமாக விளங்கிய பிள்ளையார் கோயில் குளம் தற்போது மாசடைந்துள்ளது. இதனை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குன்றத்தூர் ஒன்றியம், மலைப்பட்டு ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வரை இப்பகுதி பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வந்த பிள்ளையார் கோயில் குளம், போதிய பராமரிப்பு இல்லாததால் குடிநீருக்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. 
தற்போது மலைப்பட்டு ஊராட்சியின் பல பகுதிகளுக்கு அருகில் உள்ள மாகாண்யம் கிராமத்தில் இருந்து குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதி பொதுமக்களுக்கு கோடைக் காலங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதனைத் தவிர்க்க பிள்ளையார் கோயில் குளத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து இப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு வரை பிள்ளையார் கோயில் குளத்தின் நீரை தான் குடிநீராக பயன்படுத்தி வந்தோம். இந்நிலையில், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கலந்ததாலும், குளத்தை முறையாக பராமரிக்காததாலும் அதன் நீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே குளத்தை தூர்வாரி சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com