ஆம்பூர் அருகே நள்ளிரவில் மீண்டும் நில அதிர்வு

ஆம்பூர் அருகே அத்திமாகுலப்பள்ளி கிராமத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டது.
நில அதிர்வு காரணமாக அத்திமாகுலப்பள்ளி கிராமத்தில் வீட்டுச் சுவரில் ஏற்பட்ட விரிசல்.
நில அதிர்வு காரணமாக அத்திமாகுலப்பள்ளி கிராமத்தில் வீட்டுச் சுவரில் ஏற்பட்ட விரிசல்.

ஆம்பூர் அருகே அத்திமாகுலப்பள்ளி கிராமத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டது.
ஆம்பூர் அருகே வெங்கடசமுத்திரம் ஊராட்சி, அத்திமாகுலப்பள்ளி கிராமத்தில் வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு திடீரென வெடி சப்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டது. குறைந்த கால இடைவெளியில் 3 முறை நில அதிர்வு ஏற்பட்டது. இதனால், வீடுகளில் இருந்த பாத்திரங்கள் கீழே விழுந்தன. 
பொதுமக்கள் தங்களுடைய வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் குவிந்தனர். அச்சம் காரணமாக இரவு நீண்ட நேரம் தெருக்களிலேயே தங்கியிருந்தனர். இருந்தபோதிலும் வீடுகளுக்கு சென்ற பொதுமக்கள் உறங்காமல் அச்சத்துடன் விழித்திருந்தனர். அப்போது, நள்ளிரவு 1 மணிக்கும், அதிகாலை 3 மணிக்கும் மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால், வீடுகளில் சிறிய அளவிலான விரிசல்கள் ஏற்பட்டன.
இதுகுறித்து தகவலறிந்த ஆம்பூர் வட்டாட்சியர் மீராபென் காந்தி கிரமாத்துக்கு சனிக்கிழமை காலை சென்று பார்வையிட்டு பொதுமக்களிடம் விசாரணை நடத்தினார். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு அறிக்கை அனுப்பியுள்ளார். மேலும் நில அதிர்வு அளவு குறித்த தகவல் இல்லை. 
பூமிக்கு அடியில் உள்ள அடுக்குகளில் ஏற்பட்ட நகர்வே நில அதிர்வுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com