வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க, நீக்க இன்று சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியலில் திருத்தப் பணிகளை மேற்கொள்ள தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (அக். 22) சிறப்பு முகாம் நடைபெறுகிறது. 
வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க, நீக்க இன்று சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியலில் திருத்தப் பணிகளை மேற்கொள்ள தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (அக். 22) சிறப்பு முகாம் நடைபெறுகிறது. 
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபரில் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் கடந்த 3-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. அலுவலக வேலை நாள்களில் வட்டாட்சியர் மற்றும் மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு, நீக்கல் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தேர்தல் நேரத்தில் வாக்குச் சாவடி அமைவிடங்களாக உள்ள இடங்களில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை சிறப்பு முகாம்களுக்கும் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, கடந்த 8-ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெற்றது.
இதில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்ட பணிகளுக்காக 2 லட்சத்து 46 ஆயிரத்து 688 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டதாக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
மீண்டும் சிறப்பு முகாம்: தமிழகத்தில் ஏற்கெனவே ஒரு சிறப்பு முகாம் நடைபெற்ற நிலையில், மற்றொரு சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (அக். 22) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறும்.
பெயர் சேர்ப்பு, நீக்கம், தொகுதிக்குள்ளே இருப்பிடத்தை மாற்றியதால் தேவைப்படும் முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்கான விண்ணப்பங்கள் அளிக்கப்படும். பெயர் சேர்ப்பு, நீக்கல் பணிகளுக்காகச் செல்லும் வாக்காளர்கள் அண்மைக் காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் இரண்டை எடுத்துச் செல்ல வேண்டும்.
எதற்கு எந்த விண்ணப்பம்?: 
பெயர் சேர்க்க படிவம் 6, நீக்கத்துக்கு படிவம் 7, முகவரி மாற்றத்துக்கு படிவம் 8 மற்றும் வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களைத் திருத்தம் செய்வதற்கு படிவம் 8ஏ ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும்.
முகாம் நடைபெறும் வாக்குச் சாவடி மையங்களில் விண்ணப்பம் இல்லாத பட்சத்தில், (ஜ்ஜ்ஜ்.ற்ய்ங்ப்ங்ஸ்ரீற்ண்ர்ய்ள்.ஞ்ர்ஸ்.ண்ய்) இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இறந்தோர்-இடம் மாறியோர்: வாக்காளர் திருத்தப் பணிகளுக்கு இடையே, வாக்காளர்களில் இறந்தவர்கள், இடம் மாறி வேறு இடங்களுக்குச் சென்றோர் குறித்த கணக்கெடுப்புகளும் மாவட்ட வாரியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரையில் அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் இறந்த மற்றும் இடம் மாறிச் சென்ற வாக்காளர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 74 ஆயிரத்து 520. இதில், இறந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 609. இடம் மாறிய வாக்காளர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 911.
தமிழகம் முழுவதும் இறந்த மற்றும் இடம் மாறிய வாக்காளர்களின் எண்ணிக்கை இதுவரையில் 4 லட்சத்து 78 ஆயிரத்து 665. இறந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 68 ஆயிரத்து 785. இவர்களின் பெயர்கள் அனைத்தும் திருத்தப் பணிகள் முடிவுக்குப் பிறகு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com