5 மாவட்ட எம்.எல்.ஏ.-க்களுடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு

ஐந்து மாவட்ட எம்.எல்.ஏ.,க்களுடன் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
5 மாவட்ட எம்.எல்.ஏ.-க்களுடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு

ஐந்து மாவட்ட எம்.எல்.ஏ.,க்களுடன் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
அதிமுக எம்.எல்.ஏ.-க்களில் 19 பேர், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி அவரை மாற்றக் கோரி ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் அளித்துள்ளனர். அரசுக்கு ஆதரவு தெரிவித்து வரும் எம்.எல்.ஏ.-க்களில் பலரும் ஸ்லீப்பர் செல்களாக இருப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்.எல்.ஏ.-க்களைச் சந்திக்க முதல்வர் பழனிசாமி முடிவு செய்துள்ளார். அதன்ஒரு பகுதியாக, சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் எம்.எல்.ஏ.,க்களைச் சந்தித்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உட்பட்ட ஆரணி சேவூர் ராமசந்திரன் (அமைச்சர்), செய்யாறு தூசி கே. மோகன், கலப்பாக்கம் வி. பன்னீர் செல்வம், கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட பர்கூர் வி. ராஜேந்திரன், ஓசூர் பி. பாலகிருஷ்ணரெட்டி (அமைச்சர்), ஊத்தங்கரை மனோரஞ்சிதம் ஆகியோரைச் சந்தித்து முதல்வர் பழனிசாமி பேசினார். 
விழுப்புரம் மாவட்டத்துக்கு உட்பட்ட சட்டப் பேரவை உறுப்பினர்கள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையிலும், திருச்சி மாவட்ட சட்டப் பேரவை உறுப்பினர்கள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையிலும் திருநெல்வேலி மாவட்டத்துக்கு உட்பட்ட சட்டப் பேரவை உறுப்பினர்கள் அமைச்சர் ராஜலட்சுமி தலைமையிலும் முதல்வர் பழனிசாமியைச் சந்தித்துப் பேசினர். அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ், வளர்மதி, விஜயபாஸ்கர் ஆகியோரும் முதல்வரைச் சந்தித்துப் பேசினர்.
எண்ணிக்கை இல்லை: தன்னைச் சந்தித்த எம்.எல்.ஏ.-க்களிடம் ஒற்றுமையாக இருக்க வேண்டுமெனவும், எந்தப் பிரச்னையையும் எதிர்கொள்ளத் தயாராக வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.
எம்.எல்.ஏ.,க்களுடனான சந்திப்பு குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதுமில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் முழுவதுமாக கலந்து கொள்ளவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து, அதிமுக நிர்வாகி ஒருவர் கூறுகையில், எம்.எல்.ஏ.-க்களுக்கு குறைகள் ஏதும் இருந்தால் சம்பந்தப்பட்ட அமைச்சர் மூலமாக வந்து சந்திக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படியே, அந்தந்த மாவட்ட அமைச்சர்களுடன் எம்.எல்.ஏ.-க்கள் சந்தித்துப் பேசினர். ஆதரவு கோருவதற்கோ, எத்தனை பேர் ஆதரவாக இருக்கிறார்கள் என்பதை அறிவதற்கோ எம்.எல்.ஏ.-க்களை வரச் சொல்லவில்லை. சென்னையில் இருப்பவர்களும், வேறு அலுவல்கள் ஏதும் இல்லாதவர்களும் முதல்வரை வந்து சந்தித்துச் செல்கின்றனர். இதில், ஸ்லீப்பர் செல்களைக் கண்டறியும் பணி ஏதும் நடைபெறவில்லை எனத் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com