அடுத்தது என்ன?: டிடிவி தினகரன் ஆலோசனை

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ள பொதுக்குழுவுக்கு முன்பாக அதிரடி நடவடிக்கையைக் காட்ட டிடிவி தினகரன் தயாராகி வருகிறார்.
அடுத்தது என்ன?: டிடிவி தினகரன் ஆலோசனை

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ள பொதுக்குழுவுக்கு முன்பாக அதிரடி நடவடிக்கையைக் காட்ட டிடிவி தினகரன் தயாராகி வருகிறார்.
அதேசமயம், அரசுக்கு ஆதரவை வாபஸ் பெற்ற பிறகும் ஆளுநர் நடவடிக்கை எடுக்காத விவகாரத்தில் சட்டப்பூர்வ அம்சங்களையும் அவர் ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது. முதல்வர் பழனிசாமிக்கு அளித்த வந்த ஆதரவை அதிமுகவைச் சேர்ந்த 19 எம்.எல்.ஏ.-க்கள் வாபஸ் பெற்றாலும் இந்த விஷயத்தில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
புதுச்சேரியில் சோர்வு: ஒரு வாரத்துக்கு மேலாகியும் தங்கள் கடிதத்தின் மீது ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், புதுச்சேரியில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள் சோர்வடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆளுநர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து டிடிவி தினகரன் ஆலோசித்து வருகிறார். சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கலாமா, இந்தப் பிரச்னையில் நீதிமன்றத்தின் உதவியை நாடலாமா என்பன போன்ற அம்சங்களை ஆராய்ந்து வருவதாகத் தெரிகிறது.
குடியரசுத் தலைவருக்கு கடிதம்: திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை வியாழக்கிழமை சந்தித்து தமிழக நிலவரம் தொடர்பான கடிதத்தை அளித்துள்ளனர். இக்கடிதத்தின் மீது குடியரசுத் தலைவர் எத்தகைய நேரடியான நடவடிக்கைகளையும் எடுக்க மாட்டார் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கடிதத்தை உள்துறை, தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்து அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரை மட்டுமே செய்வதற்கு மட்டுமே வாய்ப்புகள் இருப்பதாக எனவும் அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
குடியரசுத் தலைவர், ஆளுநர் ஆகியோரிடத்தில் எந்த நடவடிக்கைகளும் இல்லாத சூழலில், சட்டப்பூர்வ அம்சங்களை டிடிவி தினகரன் அணியினர் ஆலோசித்து வருகின்றனர்.
பொதுக்குழுவுக்கு முன் அதிரடி: எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் செப்டம்பர் 12-ஆம் தேதி அறிவித்துள்ள பொதுக்குழு, செயற்குழு கூட்டத்துக்கு முன்பாக ஏதாவது ஒரு அதிரடி நடவடிக்கையை எடுக்க டிடிவி தினகரன் தயாராகி வருகிறார். இந்த அதிரடி செப்டம்பர் முதல் வாரத்தில் இருக்கும் என அவரது அணியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com