அதிர்ச்சியில் இருந்ததால் அப்போது குழப்பம்-இப்போது தெளிவு

ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து அதிர்ச்சியில் இருந்ததால் ஒரு குழப்பமான முடிவை அப்போது எடுத்தோம். இப்போது தெளிவாக இருப்பதாக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
அதிர்ச்சியில் இருந்ததால் அப்போது குழப்பம்-இப்போது தெளிவு

ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து அதிர்ச்சியில் இருந்ததால் ஒரு குழப்பமான முடிவை அப்போது எடுத்தோம். இப்போது தெளிவாக இருப்பதாக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்னையில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள். 60 நாள்கள் கெடு தருகின்றோம். அதற்குள் ஒன்று சேர வேண்டுமென்று அவர்கள்தான் (டிடிவி தினகரன்) சொன்னார்கள். இன்றைக்கு அவர்களுடைய விருப்பத்தின்படிதான் ஒன்று சேர்ந்திருக்கிறோம். இதில் என்ன குறை கண்டார்கள் என்று தெரியவில்லை.
சுயநலத்துக்காக தன்னை முன்னிலைப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறவர்கள் அமைதி காத்தாலே, அதிமுகவில் எந்தக் குழப்பமும் வராது.
அந்த முடிவு ஏன்? : ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு நாங்கள் அதிர்ச்சியில் இருந்தோம். அப்போது ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுக்க முடியவில்லை. அப்போது எடுத்த முடிவுகள் சரியாக அமையவில்லை. இப்போது தெளிவாக இருக்கிறோம். ஜெயலலிதாவின் அரசு காப்பாற்றப்பட வேண்டும் என்றார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா குடும்பம் குறித்து பேசிய குறுந்தகட்டையும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பெருமிதத்துடன் நினைவு கூர்ந்த குறுந்தகட்டையும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com