பேரவைத் தலைவரின் நோட்டீஸுக்கு செப். 5 முதல் எம்எல்ஏக்கள் விளக்கம்

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் தனபால் விளக்கம் கேட்டு அனுப்பியுள்ள கடிதத்துக்கு வரும் 5 -ஆம் தேதி முதல் 19 சட்டப்பேரவை
பேரவைத் தலைவரின் நோட்டீஸுக்கு செப். 5 முதல் எம்எல்ஏக்கள் விளக்கம்

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் தனபால் விளக்கம் கேட்டு அனுப்பியுள்ள கடிதத்துக்கு வரும் 5 -ஆம் தேதி முதல் 19 சட்டப்பேரவை உறுப்பினர்களும் தனித் தனியாக அவரைச் சந்தித்து விளக்கமளிக்க உள்ளதாக, டிடிவி.தினகரன் ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கான ஆதரவைத் திரும்பப் பெறுவதாக ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் கடிதம் அளித்தனர்.
இந்த நிலையில், கடந்த வாரம் சட்டப்பேரவைத் தலைவர் தனபால் 19 எம்எல்ஏக்களுக்கும் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியிருந்தார்.
இதுகுறித்து கடந்த வியாழக்கிழமை தங்க தமிழ்செல்வன் தலைமையில் மூன்று சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேரவைத் தலைவர் தனபாலைச் சந்தித்து விளக்கம் அளித்தனர். அந்த விளக்கத்தை இடைக்கால விளக்கமாக எடுத்து கொண்ட பேரவைத் தலைவர் தனபால், முழுமையான விளக்கத்தை அளிக்க வேண்டும் என புதுச்சேரியில் தங்கியுள்ள 19 எம்எல்ஏக்களுக்கும் இரண்டாவது முறையாக கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்த நிலையில், புதுச்சேரில் தங்க தமிழ்செல்வன் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: 
தமிழக சட்டப்பேரவைத் தலைவர் தனபால் இரண்டாவது முறையாக விளக்கம் கேட்டு அனுப்பியுள்ள கடிதத்துக்கு 19 எம்எல்ஏக்களும் வரும் 5-ஆம் தேதி முதல் பேரவைத் தலைவரை தனித்தனியாகச் சந்தித்து விளக்கம் அளிப்பர்.
தமிழகத்தில் அதிமுக ஆட்சியைக் கவிழ்க்கும் எண்ணம் ஏதும் இல்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நீக்குவதே எங்களது கோரிக்கையாகும். 
தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் விரைவில் எங்களை அழைத்துப் பேசுவார் என்ற நம்பிக்கை உள்ளது. அவ்வாறு அழைக்காத பட்சத்தில், எங்களது அணியில் மேலும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டு, குடியரசுத் தலைவரைச் சந்தித்து முறையிடுவோம் என்றார் தங்க தமிழ்செல்வன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com