மருத்துவம் படிக்க இடம் கிடைக்காததால் மாணவி அனிதா தற்கொலை: தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

அரியலூர் அருகே மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைக்காததால் மாணவி அனிதா (17) வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து
மருத்துவம் படிக்க இடம் கிடைக்காததால் மாணவி அனிதா தற்கொலை: தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்


சென்னை: அரியலூர் அருகே மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைக்காததால் மாணவி அனிதா (17) வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

அரியலூர் மாவட்டம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (54). இவர் திருச்சி காந்தி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் அனிதா. இவருக்கு 4 அண்ணன்கள் உள்ளனர்.

பிளஸ் 2 தேர்வில் அனிதா 1200-க்கு 1,176 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். ஆனால், நீட் தேர்வு முடிவில் இவர் 700-க்கு 86 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றதால் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இவரது மருத்துவ கட் ஆப் மதிப்பெண் 196.75 ஆகும். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இவருக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடந்திருந்தால் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்திருக்கும்.

தமிழக அரசு சார்பில் நீட் தேர்வை எதிர்த்து மாநில வழிக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு 85 சதவீத சிறப்பு இட ஒதுக்கீடு அளித்து அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசின் அரசாணை ரத்து செய்யப்பட்டது. இதற்கு எதிராக, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அனிதாவும் நீட் தேர்வுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். ஆனால் இந்த வழக்குகளை தள்ளுபடி செய்து, நீட் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீட் தேர்வால் மருத்துவராக முடியவில்லையே என கடந்த சில நாள்களாக விரக்தியில் இருந்த அனிதா, வெள்ளிக்கிழமை பிற்பகல் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில், இந்நிலையில், நீட் தேர்வால் மருத்துவராக முடியவில்லையே என கடந்த சில நாள்களாக விரக்தியில் இருந்த அனிதா, நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து அனிதாவின் தற்கொலையால் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த அவரது உறவினர்கள், பொதுமக்கள் அரியலூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதேபோன்று புதுச்சேரி, கடலூர், சென்னை, மதுரை, புதுக்கோட்டை, திருவாரூர், செந்துறை உள்ளிட்ட மாநிலம் முழுவதும் மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.

அனிதாவின் தர்கொலைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலகக் கோரியும், பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெரியார் திராவிடர் கழகம், தமிழ்நாடு மாணவர் மன்றத்தினரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை அண்ணாசாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், மாணவர்கள் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில ஈடுபட்டு வருகின்றனர். அவர்களையும் போலீஸார் கைது செய்தனர்.

மாநிலம் முழுவதும் மாணவர்கள், அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி எதிரில் மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டைத் தொடங்கி உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com