தமிழகத்தில் மழை தொடரும்

தமிழகம், புதுச்சேரியின் அநேக இடங்களில் அடுத்த இரண்டு நாள்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரியின் அநேக இடங்களில் அடுத்த இரண்டு நாள்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள்மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியது:
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் இலங்கை அருகே வளிமண்ட த்தின் மேலடுக்கில் சுழற்சி நிலை கொண்டிருந்தது. இந்த சுழற்சி சற்று மேற்கு திசையில் நகர்ந்து, சனிக்கிழமை மன்னார் கடல் பகுதியில் நிலைக்கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் அநேக இடங்களில் மழை அல்லது இடியுடன்கூடிய மழை தொடரும். தென், வட தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் ஓரிரு முறை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தென் மேற்கு பருவமழையானது ஜூன் 1 -ஆம் தேதி முதல் சனிக்கிழமை வரையான காலக்கட்டத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 280 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 33 சதவீதம் அதிகம் என்றார் அவர்.
நத்தத்தில் 170 மி.மீ..தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சனிக்கிழமை காலை நிலவரப்படி, திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் 170 மி.மீ. மழை பெய்துள்ளது. கரூரில் 160 மி.மீ., அரவக்குறிச்சியில் 140 மி.மீ., மதுரை மாவட்டம் பெரியாறு, வேலூர் மாவட்டம் ஆலங்காயத்தில் தலா 120 மி.மீ. மழை பதிவானது.
கோவை மாவட்டம் பீளமேடுவில் 110 மி.மீ., திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் 100 மி.மீ., பதிவானது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, கோவை தெற்கு, கோவை மாவட்டம் சூலூர், ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் தலா 90 மி.மீ. பதிவானது. கிருஷ்ணகிரி மாவட்டம் பரூர், மதுரை விமான நிலையத்தில் தலா 80 மி.மீ. மழை பதிவானது. மேலும் பல இடங்களில் 10 மி.மீ. முதல் 70 மி.மீ. வரை மழை பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com