ஸ்லீப்பர் செல்கள் உட்பட 35 எம்எல்ஏக்கள் தினகரன் பக்கம் இருக்கிறோம்: வெற்றிவேல்

அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன் அணியில் ஸ்லீப்பர் செல்கள் உட்பட 35 எம்எல்ஏக்கள் இருக்கிறோம் என்று வெற்றிவேல் எம்எல்ஏ கூறியுள்ளார்.
ஸ்லீப்பர் செல்கள் உட்பட 35 எம்எல்ஏக்கள் தினகரன் பக்கம் இருக்கிறோம்: வெற்றிவேல்


புதுச்சேரி: அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன் அணியில் ஸ்லீப்பர் செல்கள் உட்பட 35 எம்எல்ஏக்கள் இருக்கிறோம் என்று வெற்றிவேல் எம்எல்ஏ கூறியுள்ளார்.

புதுச்சேரியில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த எம்எல்ஏ வெற்றிவேல், டிடிவி தினகரன் கட்சியில் இல்லை என்று கூறும் ஜெயகுமாருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்க தொலைபேசியில் அழைப்பு விடுப்பதா? என்று கேள்விகளை எழுப்பினார்.

மேலும், அதர்மத்தைத் தடுக்கவே நாங்கள் இங்கே எல்லோரும் ஒன்றாக உள்ளோம். புதுச்சேரயில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் சிலர், தங்கியிருந்த விடுதியைவிட்டு வெளியேறியதாக தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. இதில் உண்மையில்லை. 

நாங்கள் கூறும் புகார் என்பது அமைச்சர்கள் பற்றியது மட்டுமல்ல தமிழக அரசு பற்றியது என்றும் அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com