தங்கம் பவுனுக்கு  ரூ.96 குறைவு

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் செவ்வாய்க்கிழமை (செப்.5) பவுனுக்கு ரூ.96 குறைந்து, ரூ.22,952-க்கு விற்பனையானது.

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் செவ்வாய்க்கிழமை (செப்.5) பவுனுக்கு ரூ.96 குறைந்து, ரூ.22,952-க்கு விற்பனையானது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச்சந்தையில் தங்கத்தின் மதிப்பு நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவை தங்கத்தின் விலையில் மாற்றத்துக்கு முக்கியக் காரணிகளாக உள்ளன. சென்னையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.12 குறைந்து, ரூ.2,869-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி 44 ரூபாய் 10 பைசாவாகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.44,100-ஆகவும் இருந்தது.
செவ்வாய்க்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்-
இத்துடன் ஜி.எஸ்.டி. 
சேர்த்துக்கொள்ளப்படும்)
1 கிராம் தங்கம் 2,869
1 பவுன் தங்கம் 22,952
1 கிராம் வெள்ளி 44.10
1 கிலோ வெள்ளி 44,100
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com