12 ஆண்டுகளுக்குப் பிறகு பாலாற்றில் வெள்ளம்

தொடர் மழை காரணமாக 12 ஆண்டுகளுக்குப் பின்னர் பாலாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பாலாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதை வாணியம்பாடி மேட்டுபாளையம் மேம்பாலத்தின் மீது நின்று புதன்கிழமை மகிழ்ச்சியுடன் பார்வையிடும் பொதுமக்கள்.
பாலாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதை வாணியம்பாடி மேட்டுபாளையம் மேம்பாலத்தின் மீது நின்று புதன்கிழமை மகிழ்ச்சியுடன் பார்வையிடும் பொதுமக்கள்.

தொடர் மழை காரணமாக 12 ஆண்டுகளுக்குப் பின்னர் பாலாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் பொய்த்த பருவ மழை, தொடர் மணல் திருட்டு, பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு கட்டியத் தடுப்பணைகள் ஆகியவற்றின் காரணமாக வாணியம்பாடி பகுதி பாலாற்றில் கடந்த பல ஆண்டுகளாகத் தண்ணீர் வரவில்லை. கடந்த 2005-ஆம் ஆண்டுதான் இப்பகுதி பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியது. 
இந்நிலையில் வாணியம்பாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், தமிழக -ஆந்திர மாநில எல்லையில் உள்ள வனப் பகுதிகளிலும் கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 
இதனால் தமிழக எல்லைக்கு அருகே, பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு கட்டியுள்ள புல்லூர் தடுப்பணை முழுவதுமாக நிரம்பி வழிகிறது. 
இந்நிலையில் புல்லூர் தடுப்பணையைத் தாண்டிய வெள்ளம் புல்லூர், திம்மாம்பேட்டை, ஆவாரங்குப்பம், அம்பலூர், கொடையாஞ்சியைத் தாண்டி பழைய வாணியம்பாடி பகுதி வரை பாலாற்றில் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் கடந்த 3 நாள்களாக பெய்த பலத்த மழை காரணமாக புதன்கிழமை அதிகாலை பெருக்கெடுத்த வெள்ளம், வாணியம்பாடி மேட்டுபாளையம் பாலாற்று மேம்பாலத்தின் 12 கணவாய்களில் 10 கணவாய்கள் வழியாக கரைபுரண்டு ஓடுகிறது. 
12 ஆண்டுகளுக்குப் பின்னர் பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதை அறிந்து அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். பெண்கள் அதனை மலர் தூவி வரவேற்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com