எதற்காக அசல் ஓட்டுநர் உரிமம் கேட்கப்படுகிறது? தமிழக அரசு பதில் மனு தாக்கல்

வாகனம் ஓட்டுவோர் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
எதற்காக அசல் ஓட்டுநர் உரிமம் கேட்கப்படுகிறது? தமிழக அரசு பதில் மனு தாக்கல்


சென்னை: வாகனம் ஓட்டுவோர் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

மோட்டார் வாகனச் சட்டத்தில் அசல் ஓட்டுநர் உரிமம் பற்றிய விதி எதுவும் இல்லை என்று மனுதாரர் கூறியிருந்த நிலையில், தமிழக அரசு பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது.

அந்த பதில் மனுவில், மோட்டார் வாகனச் சட்டப்படி ஏற்கனவே இருக்கும் விதிகளின் அடிப்படையில்தான், அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசு விளக்கம் அளித்துள்ளது.

மேலும், விபத்துகளை குறைப்பதற்காகத்தான் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வலியுறுத்துகிறோம். 2011 முதல் 2017 ஜூலை மாதம் வரை 32 ஆயிரம் விபத்துகள் ஏற்பட்டு 9,881  ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவிலேயே அதிக விபத்துகள் நடக்கும் மாநிலங்களில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. எனவே இதனைத் தவிர்க்கவே, அசல் ஓட்டுநர் உரிமம் கேட்கப்படுகிறது என்றும் தமிழக அரசு பதில் அளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com