தடையை மீறி திருச்சி பொதுக்கூட்டம் நடைபெறும்:  ஸ்டாலின் அறிவிப்பு!

காவல்துறை தடை விதித்தாலும் தடையை மீறி திருச்சி பொதுக்கூட்டம் நடைபெறும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அறிவித்துளார்.
தடையை மீறி திருச்சி பொதுக்கூட்டம் நடைபெறும்:  ஸ்டாலின் அறிவிப்பு!

திருச்சி: காவல்துறை தடை விதித்தாலும் தடையை மீறி திருச்சி பொதுக்கூட்டம் நடைபெறும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அறிவித்துளார்.

அனிதாவின் தற்கொலையினை அடுத்து 'நீட்' விவகாரம் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க  கடந்த திங்களன்று அனைத்துக்கட்சிக் கூட்டதிற்கு திமுக அழைப்பு விடுத்திருந்தது. அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா, மார்க்சிஸ்ட் சார்பாக  ஜி.ராமகிருஷ்ணன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பாக முத்தரசன் மற்றும் ராமசாமி, கலி பூங்குன்றன், ரவிக்குமார் உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளைக் கண்டித்து நான்கு தீர்மானங்கள் அனைத்துக் கட்சிக்கு கூட்டத்தில்  நிறைவேற்றப்பட்டன. அத்துடன் இந்த விவகாரம் தொடர்பாக திருச்சியில் இன்று அனைத்து கட்சிகளின் சார்பாக பொதுக்கூட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் 'நீட்' தேர்வுக்கு எதிரான எந்தப் போராட்டங்களையும், யாரும் நடத்த தடை விதித்து பொதுநல வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 

அதன் பிண்ணனியில் திருச்சியில் திமுக இன்று மாலை நடத்த இருந்த கூட்டத்துக்கு காவல்துறை 'திடீர்' என அனுமதி மறுத்துள்ளது. மாநகர காவல்துறை ஆணையர் அலைபேசி வாயிலாக தகவல் தெரிவித்ததாக திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.   

இந்நிலையில் கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த தலைவர்களுடன் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தான் தங்கியிருந்த விடுதியில் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ' காவல்துறை தடை விதித்தாலும் தடையை மீறி திருச்சி பொதுக்கூட்டம் நடைபெறும்' என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com