சட்டத்தை உருவாக்கியது நாம்; அதை சரியாக பயன்படுத்துவோம்: கமல்  டுவிட்டரில் வேண்டுகோள்

அமைதி வழியில் ஆர்ப்பாட்டம், போராட்டத்தில் ஈடுபட நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமையாகும். ஆனால், அந்தப் போராட்டம்
சட்டத்தை உருவாக்கியது நாம்; அதை சரியாக பயன்படுத்துவோம்: கமல்  டுவிட்டரில் வேண்டுகோள்

சென்னை: அமைதி வழியில் ஆர்ப்பாட்டம், போராட்டத்தில் ஈடுபட நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமையாகும். ஆனால், அந்தப் போராட்டம் வன்முறைச் சூழலை உருவாக்கவிடக் கூடாது. மேலும், சட்டம், ஒழுங்குச் சூழலை ஸ்தம்பிக்கச் செய்யும் வகையில் இருக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் நேற்று கூறியிருந்தது.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் சட்டம் குறித்து பதிவிட்டுள்ளார். அதில், “இந்த சட்டதை உருவாக்கியது நாம்தான். அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். தவறென்றால் மாற்றிக்கொள்ளுங்கள். ஆனால், அதை அவமானம் செய்வதும், தவறாகப் பேசுவதும் கூடாது. விவாதங்கள் மூலம் மாற்றத்தை கொண்டுவரமுடியும். வாருங்கள் விவாதிக்கலாம்” என்று கூறிள்ளார்.

ஏற்கெனவே, அனிதா எனது மகள் என்று கமல் கூறினார். தொடர்ந்து சமூகத்தில் நடக்கும் பல்வேறு சம்பவங்களை அடிப்படையாக வைத்து பதிவிட்டு வருகிறார். தற்போது, உச்ச நீதிமன்றம் சம்பவத்தை வைத்துதான் கமல் இவ்வாறு பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com