நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தால் ஆலோசித்து முடிவு எடுப்போம் 

அதிமுக ஆட்சிக்கு எதிராக எதிர்க் கட்சியினர் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தால் அப்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு முடிவெடுப்போம் என்று அதிமுக (அம்மா) அணி துணைப்
நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தால் ஆலோசித்து முடிவு எடுப்போம் 

அதிமுக ஆட்சிக்கு எதிராக எதிர்க் கட்சியினர் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தால் அப்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு முடிவெடுப்போம் என்று அதிமுக (அம்மா) அணி துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியது: பெரும்பான்மை இல்லாத முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். ஆளுநரிடமும் அதையே வலியுறுத்தியுள்ளோம். ஆளுநர் ஜனநாயக ரீதியாக நல்ல முடிவு எடுப்பார் என நம்புகிறோம். 
அதிமுக அரசை கவிழ்க்கும் எண்ணமில்லை. ஆனால், அதிமுக ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தால், அப்போதைய சூழ்நிலையக் கருத்தில் கொண்டு ஆலோசித்து முடிவு எடுப்போம். 
அதிமுக-வை பலவீனப்படுத்துவதில் பாஜக-வின் பங்கு இருப்பதாகக் கூறுவதை ஏற்க முடியாது. அடுத்தவர் பற்றி நாங்கள் பொதுவாகக் குறை கூறுவதில்லை. கம்பம் சட்டப் பேரவை உறுப்பினர் எஸ்டிகே ஜக்கையன் கடந்த 4 மாதங்களாக எங்களுடன்தான் இருந்தார். திண்டுக்கல் சீனிவாசன் கூறியதைப் போல பணம் பாதாளம் வரைக்கும் பாய்ந்திருக்கலாம்.
இரட்டை இலை சின்னத்தையும், கட்சியின் பெயரையும் முடக்கியதில் பெரும் பங்கு ஓ. பன்னீர்செல்வத்துக்கு உண்டு. தேர்தல் ஆணையம் அதிமுக அம்மா அணி, புரட்சித் தலைவி அம்மா அணி என செயல்படக் கூறியுள்ளது. இந்நிலையில் ஒரு தரப்பினர் மட்டும் அதிமுக-வின் தலைமை அலுவலகத்தை ஆக்கிரமித்துள்ளனர். அவர்களை வெளியேற்ற வேண்டும் என்பது தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஒரு கட்சியின் பொதுச் செயலர் தலைமையில் கூடினால்தான் பொதுக்குழு. இல்லையெனில் துணைப் பொதுச் செயலர் கூட்ட வேண்டும். இந்த இருவரும் இல்லாமல் வரும் 12-ஆம் தேதி கூட்டப்படுவது போலி பொதுக் குழு. இந்தப் பொதுக் குழு கூட்டத்தில் பங்கேற்கும் பொதுக்குழு உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 
கட்சியின் மாவட்டச் செயலர் பாப்புலர் வி. முத்தையா, மாநிலங்களவை உறுப்பினர் விஜிலா சத்யானந்த் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com