அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

நாளை நடைபெறும் அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

அதிமுக-வின் இரு அணிகளும் இணைந்த பின்னர் அக்கட்சியின் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் செவ்வாய்கிழமை (நாளை) நடைபெறும் என அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பொதுக்குழு, செயற்குழுக் கூட்டங்களுக்குத் தடை விதிக்கக் கோரி, தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கை நிராகரித்ததுடன் நீதிமன்ற நேரத்தை வீணடித்தது தொடர்பாக வெற்றிவேல் மீது ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்தது.

இதையடுத்து ராஜீவ் ஷக்தர், அப்துல் குத்தூஸ் ஆகிய இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் அவ்வழக்கை வெற்றிவேல் மீண்டும் மேல்முறையீடு செய்தார். 

அதில், இவ்வழக்கு மீதான விசாரணை 23-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. செவ்வாய்கிழமை நடைபெறும் அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டங்களுக்கு தடையில்லை என்று இடைக்கால தீர்ப்பளித்தது.

முன்னதாக, கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி தொடர்ந்த மற்றொரு வழக்கில் அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை விதித்தும், 13-ந் தேதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தும் பெங்களூரு மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com