துரோகமும் துரோகமும் கூட்டணி வைத்து நடத்தும் ஆட்சியை கலைக்கும் நேரம் வந்துவிட்டது: டிடிவி தினகரன்

துரோகமும் துரோகமும் கூட்டணி வைத்து நடத்தும் இந்த ஆட்சியை கலைக்கும் நேரம் வந்துவிட்டது என்று அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
துரோகமும் துரோகமும் கூட்டணி வைத்து நடத்தும் ஆட்சியை கலைக்கும் நேரம் வந்துவிட்டது: டிடிவி தினகரன்


சென்னை: துரோகமும் துரோகமும் கூட்டணி வைத்து நடத்தும் இந்த ஆட்சியை கலைக்கும் நேரம் வந்துவிட்டது என்று அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், கட்சி தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லுமா? என்று கேள்வி எழுப்பினார்.

பொதுக்குழுவைக் கூட்டும் அதிகாரம் பொதுச் செயலருக்கே உள்ளது. பொதுச் செயலர் இல்லை என்றால் துணைப் பொதுச் செயலரான நான் தான் கூட்ட வேண்டும்.

பழனிசாமியின் துரோகத்தை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். தன்னை முதல்வர் பதவிக்குக் கொண்டு வந்த சசிகலாவுக்கே துரோகம் செய்கிறார்களே. அவர்கள் எப்படி தமிழக மக்களுக்கு நன்மை செய்வார்கள். இதைத்தான் என்னை சந்திக்கும் மக்களும், கழகத்தினரும் கேட்கிறார்கள்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா இடத்தில் வேறு யாரையும் வைத்துப் பார்க்க முடியாது என இன்று கூறுபவர்கள்தான், அன்று சசிகலாவை பொதுச் செயலராக வேண்டும் என்று கோரினர்.

அதையே தான் நாங்களும் கூறுகிறோம், இன்று இவர்களை ஜெயலலிதா அமர்ந்த முதல்வர் பதவியில் வைத்து எங்களால் பார்க்க முடியாது என்பதுதான் தமிழக மக்களின் எண்ணம் மட்டுமல்ல அதிமுகவின் 90 சதவீத தொண்டர்களின் நிலையும். துரோகமும் துரோகமும் இணைந்து நடத்தும் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வேலையை தொடங்கிவிட்டேன். அவர்கள் நிறைவேற்றிய தீர்மானம் செல்லுமா? செல்லாதா என்பதை உயர் நீதிமன்றம் முடிவு செய்யும் என்று கூறினார்.

என்னால் மீண்டும் ஆட்சியமைக்க முடியும் என நான் செல்லும் இடங்களிலெல்லாம் மக்கள் கூறுகிறார்கள். தற்போது நடப்பது ஜெயலலிதா ஆட்சி அல்ல. மீண்டும் தேர்தல் வந்தால் அவர்கள் டெபாசிட் கூட வாங்க மாட்டார்கள். தேர்தல் வந்தால் எங்களுக்கும் திமுகவுக்கும்தான் போட்டியே என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

ஆளுநர் இன்னும் 2 நாட்களில் முடிவெடுப்பார் என்று நம்புகிறேன். இல்லையென்றால் அடுத்த கட்ட நடவடிக்கை தொடங்கும் என்றும் தினகரன் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com