அதிமுகவில் பொதுச் செயலாளர் என்ற பதவியே இனி இல்லை: பொதுக் குழுவில் தீர்மானம்

அதிமுகவில் பொதுச் செயலாளர் என்ற பதவியே இனி இல்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, அதிமுகவின் விதிகளில் எங்கெல்லாம் பொதுச் செயலாளர் என்ற வார்த்தை

அதிமுகவில் பொதுச் செயலாளர் என்ற பதவியே இனி இல்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, அதிமுகவின் விதிகளில் எங்கெல்லாம் பொதுச் செயலாளர் என்ற வார்த்தை இருக்கிறதோ அதற்குப் பதிலாக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
உறுப்பினர் சேர்க்கையின் போது, பொதுச் செயலாளர் முன்னிலையில் ஒருவர் கட்சியின் உறுப்பினர் ஆகலாம் என உள்ளது. இம்முறைக்குப் பதிலாக, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் முன்னிலையில் உறுப்பினர் ஆகலாம் என்று மாற்றப்பட்டுள்ளது.
ஒருங்கிணைப்பாளர்-இணை ஒருங்கிணைப்பாளர்: அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகளுக்குப் போட்டியிடுபவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களாகத் தொடர்ந்து 5 ஆண்டுகள் இருக்க வேண்டும்.
அவர்கள் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்கள் 5 ஆண்டுகளுக்குப் பொறுப்பில் நீடிப்பர். அவர்களே கட்சியின் நிர்வாகப் பொறுப்புகள் அனைத்தையும் கவனிப்பார்கள்.
ஆலோசனைக் குழு: துணைப் பொதுச் செயலாளர்களை, பொதுச் செயலாளர் நியமனம் செய்வார் என்ற விதி ஏற்கெனவே இருந்தது. அதற்குப் பதிலாக, ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள். அவர்கள் கட்சியின் வெற்றிக்குத் தேவையான ஆலோசனைகளை கட்சித் தலைமைக்கு வழங்குவார்கள்.
முழு அதிகாரம்: அதிமுகவின் அனைத்து துணை அமைப்புகளும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரின் நேரடிப் பார்வையில் செயல்படும். மேலும், சட்ட திட்ட விதிகளில் எந்தவொரு விதியைத் தளர்த்துவதற்கும், விதி விலக்கு அளிப்பதற்கும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு முழு அதிகாரம் உண்டு. இதுபோன்று அதிமுகவின் சட்டதிட்ட விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com