கட்சியை நிர்வகிக்க புதிய பதவிகள்: ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமிக்கு பொதுச் செயலாளருக்குரிய அதிகாரம்

அதிமுகவை நிர்வகிக்க புதிய பதவிகள் ஏற்படுத்தப்படும் என்று கட்சியின் பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கட்சியை நிர்வகிக்க புதிய பதவிகள்: ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமிக்கு பொதுச் செயலாளருக்குரிய அதிகாரம்

அதிமுகவை நிர்வகிக்க புதிய பதவிகள் ஏற்படுத்தப்படும் என்று கட்சியின் பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதிய பதவிகளை ஏற்படுத்துவது தொடர்பாக, இரண்டு முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 
அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
மறைந்த ஜெயலலிதாவின் எண்ணப்படி, அதிமுகவை வழிநடத்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பொறுப்புகளை உருவாக்க பொதுக்குழு தீர்மானிக்கிறது.
பொதுக்குழு உறுப்பினர்களால், அமைப்புத் தேர்தல் மூலம் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் தேர்ந்தெடுக்கப்படுவர். 
அமைப்புத் தேர்தல் நடைபெறும் வரை, ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்று பல ஆண்டுகள் பணியாற்றி வந்திருக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஒருங்கிணைப்பாளராகவும், இணை ஒருங்கிணைப்பாளராக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்கிறது.
பொதுச் செயலாளர் அதிகாரம்: அதிமுக பொதுச் செயலாளருக்கு கட்சியின் சட்ட திட்ட விதிகளில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் அனைத்தையும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் முழுமையாகப் பெற்று கட்சியை வழிநடத்துவர்.
இரண்டு துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.
யார் கையெழுத்திடுவர்? தேர்தல் ஆணையத்துக்கும், அரசுக்கும், நீதிமன்றங்களுக்கும், வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட அனைத்து வரவு செலவுகளுக்கும், அதிமுக சார்பில் வழங்கப்பட வேண்டிய படிவம் ஏ, பி உள்ளிட்ட அனைத்து வகை ஆவணங்களிலும், கட்சி தொடர்புடைய அனைத்து அறிவிப்புகளிலும், நியமனங்களிலும், ஒழுங்கு நடவடிக்கைகளிலும் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து கையெழுத்திட்டு அளிக்க வேண்டும் என பொதுக் குழு தீர்மானிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com