காவல் துறையை ஏவி தமிழக அரசு மிரட்டல்: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

தனது ஆதரவு எம்எல்ஏக்கள் காவல் துறையின் மூலம் மிரட்டப்படுவதாக டிடிவி தினகரன் பரபரப்பு குற்றஞ்சாட்டியுள்ளார்.
காவல் துறையை ஏவி தமிழக அரசு மிரட்டல்: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

தனது ஆதரவு எம்எல்ஏக்கள் காவல் துறையின் மூலம் மிரட்டப்படுவதாக டிடிவி தினகரன் பரபரப்பு குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  
என் மீதும், நடிகர் செந்தில் மீதும் திருச்சியில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பழனியப்பன் எம்எல்ஏ கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல் தவறு. அவர் நீதிமன்றத்தை நாடியுள்ளதாக எனக்கு தகவல் வந்துள்ளது. 

எங்கள் ஆதரவு எம்எல்ஏக்கள் மீது வழக்கு போடுவோம் என்று காவல் துறையை ஏவி மிரட்டுகிறார்கள். நீதிமன்றத்தை அணுகி காவல் துறை மீது வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம். பெரும்பான்மை பலத்தை அடைய முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார். தங்களுக்கு பல கோடி ரூபாய் பேரம் பேசப்படுவதாக எங்களது எம்எல்ஏக்கள் கூறுகின்றனர். 

கோரிக்கை மனு அளித்தபோது, 14ஆம் தேதி வரை காத்திருக்குமாறு ஆளுநர் கூறினார். ஸ்லீப்பன் செல்கள் எத்தனை பேர் என்பதை தற்போது தெரிவிக்க முடியாது. 21 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது, நம்பிக்கை வாக்கெடுப்பில் ஸ்லீப்பர் செல்கள் யார் என தெரியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com