சேலம்: பெண்ணின் ஸ்மார்ட் கார்டில் நடிகையின் புகைப்படம் இடம்பெற்றது எப்படி?

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சரோஜா என்ற பெண்ணின் ஸ்மார்ட் கார்டில் அவரது புகைப்படத்துக்கு பதிலாக நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
சேலம்: பெண்ணின் ஸ்மார்ட் கார்டில் நடிகையின் புகைப்படம் இடம்பெற்றது எப்படி?


சேலம்: சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சரோஜா என்ற பெண்ணின் ஸ்மார்ட் கார்டில் அவரது புகைப்படத்துக்கு பதிலாக நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

ஓமலூர் அடுத்த கமலாபுரத்தைச் சேர்ந்த சரோஜா என்ற பெண், ரேஷன் கடையில் தனது பெயரைச் சொல்லி ஸ்மார்ட் கார்டு பெற்றுள்ளார்.

அந்த அட்டையில், பெயர், முகவரி என அனைத்தும் சரியாக இருந்தும், அவரது புகைப்படம் இடம்பெற வேண்டிய இடத்தில், நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படம் இடம்பெற்றிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து ரேஷன் கடை ஊழியர்களிடம் கேட்ட போது, இது அச்சடிக்கும் போது ஏற்பட்ட தவறாக இருக்கலாம். இ-சேவை மையத்தில் கொடுத்து புகைப்படத்தை மட்டும் மாற்றிக் கொள்ளலாம் என்று விளக்கம் அளித்துள்ளனர்.

இத்தனை நாட்களுக்குப் பிறகு கிடைத்த ஸ்மார்ட் கார்டில் புகைப்படம் மாறி இருப்பதால் அதிருப்தி அடைந்த சரோஜா, இதனை எப்படி அடையாள அட்டையாகப் பயன்படுத்த முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஸ்மார்ட் கார்டுகளில் புகைப்படம் இல்லாமல் தான் இணையதளத்தில் பதியப்பட்டிருந்தது. இதில், ஆங்காங்கே இணையதள மையங்கள் மூலமாக மக்கள் தங்களது புகைப்படங்களை ஸ்மார்ட் கார்டுடன் இணைத்துக் கொண்டனர். அந்த வகையில் புகைப்படம் இணைக்காதவர்களுக்கு புகைப்படம் இல்லாமலும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது சரியான புகைப்படம் இடம்பெற்றிருக்க வேண்டும். இரண்டும் இல்லாமல் நடிகையின் புகைப்படம் எப்படி மாறியது என்பது மிகப்பெரிய கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.

ஏராளமான ஸ்மார்ட் கார்டுகளில் பெயர் மற்றும் முகவரியில் எழுத்துப் பிழைகள் ஏராளமாக உள்ளன. சிலர் தங்களது ஸ்மார்ட் கார்டுகளை காண்பிக்க முடியாத அளவுக்குக் கூட பெயர்களில் பிழைகள் உள்ளன. ஆனால் பல லட்சக்கணக்கான ஸ்மார்ட் கார்டுகளை அச்சடிக்கும் போது இதெல்லாம் சகஜம் என்றுதான் பொதுமக்களும் ஏற்றுக் கொண்டனர்.

ஆனால் இங்கே நடந்திருப்பதை எந்த வகையில் ஏற்றுக் கொள்வது என்பதே சாமானியர்களின் கேள்வியாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com