நீட் தேர்வு: திமுக இன்று ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வைக் கண்டித்து, திமுக மற்றும் அதன் ஆதரவு கட்சிகள் தமிழகம் முழுவதும் புதன்கிழமை (செப்.13) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளன.

நீட் தேர்வைக் கண்டித்து, திமுக மற்றும் அதன் ஆதரவு கட்சிகள் தமிழகம் முழுவதும் புதன்கிழமை (செப்.13) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளன.
காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக் உள்பட பல்வேறு கட்சியினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
தாம்பரத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திமுக மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com