செப்.17-இல் நாமக்கல்லில் கம்பன் விழா

நாமக்கல் கம்பன் கழகம் சார்பில் கம்பன் விழா, வரும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் பங்கேற்று கம்பனின் தமிழ் என்ற தலைப்பில் பேசுகிறார். 

நாமக்கல் கம்பன் கழகம் சார்பில் கம்பன் விழா, வரும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் பங்கேற்று கம்பனின் தமிழ் என்ற தலைப்பில் பேசுகிறார். 
நாமக்கல்-திருச்சி சாலை கோல்டன் பேலஸ் ஹோட்டல் அரங்கில் காலை 10 மணிக்கு விழா தொடங்குகிறது. விழாவுக்கு நாமக்கல் கம்பன் கழகத் தலைவர் வி.சத்தியமூர்த்தி தலைமை வகிக்கிறார். செயலர் அரசு.பரமேஸ்வரன் வரவேற்றுப் பேசுகிறார். சிறப்பு விருந்தினராக பிஜிபி கல்வி குழுமத் தலைவர் பழனி ஜி.பெரியசாமி பங்கேற்று பேசுகிறார். 
இதனைத் தொடர்ந்து, பேச்சுப் போட்டியில் வெற்றிபெற்ற கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன. தொடர்ந்து, விழாவில் தமிழறிஞர் சிலம்பொலி சு.செல்லப்பனுக்கு கம்பர் விருது, அம்பத்தூர் கம்பன் கழகத் தலைவர் பழ.பழனியப்பனுக்கு கம்ப கலாநிதி விருது வழங்கப்படுகிறது. 
இந்த விருதுகளை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் வழங்குகிறார். தொடர்ந்து, அவர் கம்பனின் தமிழ் என்ற தலைப்பில் பேசுகிறார். விழாவில், துறைசார் வல்லுநர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. கல்விச் செம்மல் விருது பாரதி கல்வி நிறுவனங்களின் செயலர் கே.சாரதாமணிக்கும், மனிதநேய மருத்துவர் விருது பரமத்தி வேலூரைச் சேர்ந்த கே.முத்துக்குமாருக்கும், சமூக ஆர்வலர் விருது பொறியாளர் என்.மாணிக்கத்துக்கும், வேளாண் வித்தகர் விருது செருக்கலை டி.பொன்னுசாமிக்கும், நல்லாசிரியர் விருது நம்மாழ்வர் பள்ளி ஆசிரியர் சி.ஜெயச்சந்திரனுக்கும் வழங்கப்படுகிறது. 
மாலை 5 மணிக்கு பட்டிமன்றம் தொடங்குகிறது. 
கம்பரை கவிச்சக்கரவர்த்தி ஆக்கியவர் ராமனே, ராவணனே என்ற தலைப்பில் நடைபெறும் இந்த பட்டிமன்றத்துக்கு சுகிசிவம் நடுவராகப் பொறுப்பு வகிக்கிறார். ராமனே என்ற அணியில் சென்னையைச் சேர்ந்த பி.மணிகண்டன், திருச்சியைச் சேர்ந்த ரா.மாது, புதுக்கோட்டையைச் சேர்ந்த ச.பாரதிபாபு பேசுகின்றனர். ராவணனே என்ற அணியில் நாகர்கோவிலைச் சேர்ந்த பேராசிரியர் த.ராஜாராம், சென்னையைச் சேர்ந்த செ.மோகனசுந்தரம், ராஜபாளையத்தைச் சேர்ந்த கவிதா ஜவஹர் ஆகியோர் பேசுகின்றனர். 
விழா ஏற்பாடுகளை நாமக்கல் கம்பன் கழகத் தலைவர் வ.சத்தியமூர்த்தி, செயலர் அரசு பரமேஸ்வரன், அமைப்பாளர் தில்லை மா.சிவக்குமார் ஆகியோர் செய்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com