திராவிட இயக்கக் கொள்கைக்கு சவாலான நேரம்

திராவிட இயக்கக் கொள்கைக்கு சவாலான நேரம்

திராவிட இயக்கக் கொள்கைக்கு இது சவாலான நேரமாக இருந்து வருகிறது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.இதுதொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

திராவிட இயக்கக் கொள்கைக்கு இது சவாலான நேரமாக இருந்து வருகிறது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
அண்ணாவின் பிறந்தநாள் (செப்.15), பெரியாரின் பிறந்தநாள் (செப்.17) , திமுக தோற்றுவிக்கப்பட்ட நாள் ( செப்.17) ஆகியவற்றை முப்பெரும் விழாவாக, சென்னையில் தொடங்கி தமிழகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாட உள்ளோம்.
எந்தக் கொள்கைகளுக்காக திராவிட இயக்கம் அரும்பாடுபட்டு, மக்கள் நலனை காத்ததோ, அந்தக் கொள்கைகளுக்கு சவாலும், கடும் சோதனையும் உருவாகியிருக்கும் நேரம் இது.
சமூக நீதியைச் சிதைக்கும் நீட் தேர்வு, அடிப்படைத் தேவைகள் அனைத்திலும் மாநில உரிமைகளைப் பறித்து மத்திய அரசின் அதிகாரத்துக்குள் செல்லும் போக்கு அதிகரிப்பு என, கடந்த நூறாண்டுகளில் தமிழகம் போராடிப் பெற்ற அனைத்து உரிமைகளும் பறிக்கப்படுகின்றன. இந்த நிலை மாறாமல் கூட்டாட்சித் தத்துவத்தையும், மாநில சுயாட்சியையும் நாம் மீட்க முடியாது. அந்த மாற்றத்துக்கான பயிற்சிக் களமே முப்பெரும் விழா.
தமிழக மக்கள் விரும்பும் மாற்றத்துக்கு அடித்தளமிடும் வகையில், முப்பெரும் விழாவினை திமுகவினர் சிறப்பாகக் கொண்டாட வேண்டும்.
செப்டம்பர் 15 -ஆம் தேதி, சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பாக உள்ள அண்ணா சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்துவதுடன், 16 -ஆம் தேதி திண்டுக்கல் வத்தலக்குண்டு சாலை, அண்ணா திடலில் நடைபெறும் பொதுக்கூட்டம், 17 -ஆம் தேதி சென்னை சிம்சன் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வு ஆகியவற்றில் பங்கேற்கிறேன்.
இந்த ஆண்டு பெரியார் விருது என்.கிருஷ்ணமூர்த்தி, அண்ணா விருது பெ.சு.திருவேங்கடம், பாவேந்தர் விருது அ.அம்பலவாணன், கலைஞர் விருது சங்கரி நாராயணன் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது என்று மு.க.,ஸ்டலின் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com