துப்பறிவாளன் படத்தை வெளியிட நீதிமன்றம் நிபந்தனை

விநியோக உரிமை தொடர்பான வழக்கில், நடிகர் விஷாலின் 'துப்பறிவாளன்' திரைப்படத்தை வெளியிட நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

விநியோக உரிமை தொடர்பான வழக்கில், நடிகர் விஷாலின் 'துப்பறிவாளன்' திரைப்படத்தை வெளியிட நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
இந்த திரைப்படத்தின் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் பகுதிகளின் விநியோக உரிமை, ரூ. 55 லட்சம் பெற்றுக் கொண்டு தருமபுரியை சேர்ந்த டி.என்.சி. சினி ஸ்கீரின்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. பின்னர் இந்தப் படத்தின் முழுமையான விநியோக உரிமையை நடிகர் விஷாலின் 'விஷால் ஃபிலிம் ஃபேக்ட்ரி'-க்கு கொடுக்கப்பட்டதால், தாங்கள் கொடுத்த ரூ. 55 லட்சத்தை திருப்பி தரக் கோரி டி.என்.சி. நிறுவனம் கேட்டது.
படத்தை வியாழக்கிழமை (செப்.14) வெளியிட படக் குழு திட்டமிட்டுள்ள நிலையில், விஷாலின் நிறுவனம் மற்றும் மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் உடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, டி.என்.சி. சார்பில் படத்தை வெளியிட தடைவிதிக்க கோரி, சென்னை 5 -ஆவது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 
இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, டி.என்.சி. நிறுவனத்துக்கு வியாழக்கிழமை (செப்.14) காலை 10.30 மணிக்குள் ரூ. 25 லட்சம் தரத் தயாராக இருப்பதாகவும், 18 திரையரங்குகளில் மட்டும் வெளியிடும் உரிமை தருவதாகவும் விஷால் பட நிறுவனம் தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டது.
இதனைப் பதிவு செய்த நீதிபதி, உத்தரவாதம் அளித்தப்படி வியாழக்கிழமை (செப்.14) காலைக்குள் பணம் கொடுக்கப்படாவிட்டால், படத்தை வெளியிடக் கூடாது என்ற தடை அமலாகும் எனத் தெரிவித்து, வழக்கை செப்டம்பர் 19 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com