'நீட்' தேர்வில் தமிழகத்துக்கு 3 ஆண்டுகள் விலக்கு அளிக்க வேண்டும்: ஜாவடேகரிடம் நடிகை கௌதமி வலியுறுத்தல்

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு மூன்று ஆண்டுகள் விலக்க அளிக்க வேண்டும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரை நடிகை கௌதமி புதன்கிழமை நேரில் சந்தித்து
தில்லியில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரை புதன்கிழமை சந்தித்த நடிகை கெளதமி.
தில்லியில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரை புதன்கிழமை சந்தித்த நடிகை கெளதமி.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு மூன்று ஆண்டுகள் விலக்க அளிக்க வேண்டும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரை நடிகை கௌதமி புதன்கிழமை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
புது தில்லியில் அமைச்சர் அலுவலகத்தில் பிரகாஷ் ஜாவடேகரை சந்தித்த பிறகு செய்தியாளர்களுக்கு நடிகை கௌதமி அளித்த பேட்டி: அண்மைக் காலத்தில் என்னை மிகவும் பாதித்த விஷயம் 'நீட்' தேர்வாகும். 
'நீட்' தேர்வு மிகவும் அழுத்தமான ஒன்றாகும். மாணவி அனிதா மரணம் மிகவும் மனப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. 
நானும் ஒரு தாய் என்பதால் இந்தச் சம்பவம் என்னை மிகவும் பாதித்துள்ளது. நீட் தேர்வை எதிர்கொள்வதில் குழந்தைகள் பிரச்னையை எதிர்கொள்கின்றனர். பெற்றோர்களும் மனப் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
இதனால், நீட் தேர்வில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு விலக்கு அளிப்பது, நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்குத் தேவையான ஆதரவுகள், அவர்களைத் தயார்படுத்துவது, பாடத் திட்டத்தில் அதற்கு ஏற்ப தேவையான மாற்றங்கள் செய்வது ஆகியவை தொடர்பாக மத்திய அமைச்சர் ஜாவடேகரை நேரில் சந்தித்து மனு அளித்து வலியுறுத்தினேன். 
எனது கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து நல்ல முடிவுக்கு வர இரு வாரங்களாகும் என்று அமைச்சர் கூறினார். அவரது பதில் ஆக்கப்பூர்வமாக உள்ளது. தற்போது எங்கள் 'லைஃப் அகெய்ன் பவுண்டேஷன்' அமைப்பு மூலமும் மாணவர்களுக்குப் பயிற்சி வகுப்பு எடுப்பது போன்ற ஆதரவுகளை அளித்து வருகிறோம் என்றார் கெளதமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com