பல்லாயிரம் கோடி ரூபாய் கிரானைட் முறைகேடு: மாஜிஸ்திரேட் இன்றி தள்ளிப்போகும் விசாரணைகள்

மேலூர் பகுதியில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கிரானைட் முறைகேடுகள் தொடர்பான வழக்குகள், மாஜிஸ்திரேட் இல்லாத நிலையில், விசாரணை தள்ளிவைக்கப்பட்டு வருகிறது.
பல்லாயிரம் கோடி ரூபாய் கிரானைட் முறைகேடு: மாஜிஸ்திரேட் இன்றி தள்ளிப்போகும் விசாரணைகள்

மேலூர் பகுதியில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கிரானைட் முறைகேடுகள் தொடர்பான வழக்குகள், மாஜிஸ்திரேட் இல்லாத நிலையில், விசாரணை தள்ளிவைக்கப்பட்டு வருகிறது.

மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் அரசு புறம்போக்கு நிலங்கள், பொதுப்பணித் துறை பாசனக் கண்மாய்கள், கால்வாய்கள் மற்றும் நீரோடை புறம்போக்கு நிலங்களிலும் சட்ட விரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு கடத்தப்பட்டுள்ளன. மேலும், சுமார் 1.80 லட்சம் கிரானைட் கற்களை சட்டவிரோதமாகப் பதுக்கி வைத்துள்ளனர்.

இது தொடர்பாக, மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் இல. சுப்பிரமணியன் 98 வழக்குகளை மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். தனிப்பிரிவு போலீஸார் 67 வழக்குகளில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், கடந்த மே மாதம் மாஜிஸ்திரேட் இடமாறுதல் செய்யப்பட்டார்.  தாற்காலிகமாக, மதுரை நீதித் துறை நடுவர் மன்ற மாஜிஸ்திரேட்டுக்கு கூடுதல் பொறுப்பு ஒதுக்கப்பட்டது. ஆனால், இதுவரை நிரந்தரமாக மாஜிஸ்திரேட் நியமனம் செய்யப்படவில்லை.

இதனிடையே, மாஜிஸ்திரேட் இல்லாததால் பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு தொடர்பான விசாரணைகள் நிலுவையில் உள்ளன. மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட வேண்டிய குற்ற வழக்குகளும் நிலுவையிலேயே உள்ளன. புதன்கிழமை விசாரணைக்கு வந்த ஆட்சியர் தொடர்ந்த 28 கிரானைட் முறைகேடு வழக்குகளும், போலீஸார் தொடர்ந்திருந்த 6 குற்ற வழக்குகளும், அக்டோபர் 11-ஆம் தேதிக்கு மேலூர் நீதித்துறை நடுவர்மன்றம் தள்ளிவைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com