வைகை அதிவிரைவு ரயில் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும்

காவிரி மகா புஷ்கர விழாவில் தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து காவிரிஆற்றில் புனித நீராடுவார்கள் 
வைகை அதிவிரைவு ரயில் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும்

காவிரி மகா புஷ்கர விழாவில் தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து காவிரிஆற்றில் புனித நீராடுவார்கள் என்பதால் அதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

வெளி மாநிலங்களிலிருந்து பேருந்துகள் மூலம் பக்தர்கள் ஸ்ரீரங்கம் வந்தாலும், ரயில் மூலமாகவும் குறிப்பிட்ட அளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை எழும்பூர்} மதுரை இடையேயான வைகை அதிவிரைவு ரயில் ( வண்டி எண் 12635) ஸ்ரீரங்கத்துக்கு மாலை 5.48 மணிக்கு வந்து 1 நிமிஷம் நின்று மாலை 5.49 மணிக்குப் புறப்படும். 

இதுபோல, மறுமார்க்கத்தில் மதுரை - சென்னை எழும்பூர் இடையேயான வைகை அதிவிரைவு ரயில் ( வண்டி எண் 12636) காலை 9.22 மணிக்கு ஸ்ரீரங்கம் வந்து காலை 9.23 மணிக்குப் புறப்பட்டுச்செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com