10 நாள்களில் டெங்கு கட்டுப்படுத்தப்படும்: சி.விஜயபாஸ்கர்

தமிழகத்தில் இன்னும் 10 நாள்களில் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்படும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.
10 நாள்களில் டெங்கு கட்டுப்படுத்தப்படும்: சி.விஜயபாஸ்கர்

தமிழகத்தில் இன்னும் 10 நாள்களில் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்படும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.
சென்னை பெருநகர காவல்துறை மற்றும் சுகாதாரத் துறையும் இணைந்து காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மருத்துவ முகாமை, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் நடத்தின.
உள்ளாட்சி மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மீனவளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
முகாமில் காய்ச்சலை கண்டறிதல், கொசு மருந்து அடிக்கும் வாகனங்கள் அறிமுகம், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்குதல், சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைப்பதற்கான உறுதிமொழி எடுத்தல் ஆகியவை நடைபெற்றன.
அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியது: எல்லா காய்ச்சலும் டெங்கு காய்ச்சல் இல்லை. ஆனால், காய்ச்சல் பாதித்தால் அனைவரும் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுக வேண்டும். மாவட்ட வாரியாக காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக எடுக்கப்பட்டு
வருகின்றன. சென்னை உள்பட தமிழகத்தில் இன்னும் 10 நாள்களில் டெங்கு காய்ச்சல் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும் என்றார்.
சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், "டெங்கு என்பது கொசுவால் பரப்பப்படும் ஒருவகை வைரஸ் காய்ச்சல். இதற்கு தடுப்பூசி கிடையாது. காய்ச்சல் ஏற்பட்ட உடன் மருத்துவரை அணுகினால் உயிரிழப்பைத் தடுக்க முடியும். கொசு ஒழிப்பை மக்கள் இயக்கமாக மாற்றினால் மட்டுமே வெற்றியடைய முடியும். ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஏடிஎஸ் கொசு ஒழிப்பு தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன' என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com